பாஜகவின் லட்சியங்களில் ஒன்று காங்கிரஸ் இல்லாத இந்தியா! ஒரு எதிர்கட்சியாகக் கூட காங்கிரஸ் உயிர்பித்து இருக்கக் கூடாது. அவ்வளவு ஏன் ஒரு பலவீனமான கட்சியாகக் கூட அது ஜீவித்திருக்கக் கூடாது என்பது தான் பாஜகவின் இலக்கு! இதை பல மேடைகளில் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் சொல்லி இருக்கிறார்கள்! அதே சமயம் அந்த அழித்தொழிப்பை அவர்கள் ஜனநாயக வழியில் செய்வதற்கு செய்வதை விடவும், ஆள்தூக்கி அரசியல் வழியாக – பேர அரசியல் வழியாகத் –  தான் பல்வேறு மாநிலங்களிலும் நடைமுறைப் படுத்தினார்கள். நமக்கு மிக ...

‘’மேற்கு வங்கம் இந்தியாவை காப்பாற்றிவிட்டது’’ என்று மம்தா பானர்ஜி சொன்ன வார்த்தைகள் சத்தியமான உண்மை! இந்தியாவின் கலாச்சார தலைநகரமான மேற்குவங்கத்தில் எப்படியாவது காலூன்ற வேண்டும் என்பது பாஜகவின் நீண்ட நாள் பெருங் கனவு! இன்றைய பாஜகவின் தாய் அமைப்பான ஜனசங்கத்தின் ஸ்தாபகரான ஷியாம் பிரசாத் முகர்ஜியின் பிறந்த மண்ணில் பாஜகவிற்கு இடமில்லையே’ என்ற ஆதங்கம், ஆற்றாமை பாஜக தலைவர்களுக்கு நிறையவே உண்டு. இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது மேற்குவங்கத்தை பெருங் கொலைக் களமாக்கியவர் இந்த ஷியாம் பிரசாத் முகர்ஜி! சூமுகமாக முடிந்திருக்க வேண்டிய காஷ்மீர் ...

தேர்தல் போட்டி என்பதைக் கடந்து ஒரு யுத்தமாக மேற்குவங்கம் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கிறது! எல்லா நியாய அநியாயங்களையும் புறந்தள்ளி அழுத்தொழிப்பு அரசியலாக அது பரிமாணம் பெற்று வருவதை ஒட்டுமொத்த இந்தியாவே பதற்றத்துடன் பார்க்கிறது! தேர்தல் போட்டி என்பது ஜனநாயகத்தில் சகஜமான ஒன்று! ஆனால், அது வங்கத்தை பொறுத்தவரை வக்கிரமான வடிவம் கொண்டு உக்கிரமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது! வகுப்புவாத, மதவாத அரசியல் தழைத்தோங்கும் மாநிலமாக தினம், தினம் ரத்தம் சிந்தும் பூமியாக அது நிறம் மாறிவருகிறது! ஒரு மிகப் பெரிய பாரதப் போர் நிகழ்வதற்கான முஸ்தீபுகள் ...

மேற்குவங்கத்தில் ஆளும் திரிணமுள் காங்கிரசை நாளும்,பொழுதும் அணு அணுவாகப் பிளந்து விழுங்கிவருகிறது பாஜக! இரண்டு நாள் பயணமாக தற்போது கல்கத்தாவில் கால்பதித்துள்ளார் அமித்ஷா! திசைமாறி பயணிக்க தயாராகவுள்ள திரிணமுள் தலைவர்களை தீயாய் தேடி எடுத்து அமித்ஷாவிடம் ஒப்படைக்கும் செயல்திட்டம் படுவேகம் பெற்றுவிட்டது! திரிணமுள்ளின் பலமும்,பலவீனமும் மம்தாதான்! மம்தாவின் செயல்பாடுகள் பாஜகவை எப்படி பலம்பெற வைத்துக் கொண்டுள்ளன என்பதை அலசுகிறது இந்த கட்டுரை! மதவாத அரசியலின் மாபாதகத்தை இந்திய – பாகிஸ்தான் பிரிவினையின் போது சந்தித்த மண் தான் வங்கம்! ரத்தகறை படிந்த அந்த மதவாத ...