தரமற்ற கட்டிடங்கள், தகுதியற்ற நிர்வாகம், பகல் கொள்ளையடிக்கும் தாளாளர்கள், பரிதாபத்திற்குரிய ஆசிரியர்கள், பரிதவிக்கும் மாணவர்கள்..! இது போன்ற நிலையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளை அரசே பொறுப்பெடுத்துக் கொண்டால் என்ன..? திருநெல்வேலி டவுன் செல்லும் சாலையில்  பாளையங்கோட்டையில் ஷாப்ஃடர் மேல்நிலைப்பள்ளி என்ற அரசு உதவிபெறும் பள்ளியில் டிசம்பர் 17 காலை பள்ளி கட்டிடத்தின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில் மூன்று மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்த நிலையில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ...