எதனால் வங்கிகளில் போலி வகைகளை வைத்து பணம் பெற்று ஏமாற்றும் செயல்கள் தொடர்ந்து நடக்கின்றன? எப்படி தடுப்பது? ஒவ்வொரு நிமிடமும் கவனமாக இருக்கவேண்டிய வேலை வங்கிப் பணியாகும். ஒரு நிமிடக் கவன குறைவும் பெரிய பிரச்சனைகளை உண்டாக்கிவிடும். கவன குறைவால் உயிர் சேதம் வங்கி பணியில் ஏற்படாது என்றாலும், கோடிக்கணக்கான பணம் ஏமாற, ஏமாற்ற வழி உண்டு. சமீபமாக கூட்டுறவு வங்கியில் போலி நகைகளை வைத்து பல கோடி மோசடி செய்தது வெளிவந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள கூட்டுறுவு வங்கியில் 2 கோடி ...