சென்ற ஞாயிறு மாலை நேரம்..தேனாம்பேட்டை பிரதான பகுதியில் அமைந்திருந்த அலுவலக மேல் மாடியில் அந்த அரங்கநாடகம் துவங்கிய நேரத்தில் உள் நுழைந்தேன். உட்கார இடம் இல்லாமல் நண்பர்களின் துணையுடன் ஓரிடத்தில் அமர்ந்து கொண்டேன். நாடகம் துவங்கிய சில நிமிடங்களில் உள்நுழைந்தேன். ஒவ்வொருநாளும், ஒவ்வொரு நிமிடமும் நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளில் ஊடாட்டம் செய்ய வேண்டியது பற்றி படர்ந்து விரிந்து சென்றது ‘உள்ளூரம்’. இது வழக்கமான நாடகம் போல இல்லை, வாழ்க்கையை நேர்பட பார்க்கத் தரும் ஒரு வாய்ப்பாக இருந்தது. நாடகவியலாளர்அ.மங்கை ஒருங்கிணைப்பில் இந்திய மாணவர் ...