மணிப்பூரை கலவர பூமியாகவே கட்டமைத்து தன் அஜந்த்தாக்களை நிறைவேற்றிக் கொண்டுள்ளது, காவி பாஸிச பாஜக அரசு. உண்மையில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விடவும், அதை தீராப் பிரச்சினையாக்கவே பாஜக விரும்புகிறது. மூன்று முக்கிய பிரிவினருக்கும் முதல்வர், துணை முதல்வர்கள் பதவிகள் வழங்கியதின் பயன் என்ன? பிப்ரவரி 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுக்கு பிறகு மணிப்பூர் பிரச்சினைக்கே விடிவு காலம் வந்துள்ளது எனப் பலர் பூரித்தனர்.  ஒரு மெய்தீ இனத்தை சார்ந்த ஒருவர் முதல்வராகவும், குக்கி இனத்தை சார்ந்த பெண்மணி ஒருவர் துணை முதல்வராகவும், நாகா ...