நடிகர் மன்சூர் அலிகானை கைது செய்யப் போவதாக அச்சுறுத்துவதின் வாயிலாக என்ன சொல்ல வருகிறீர்கள்! சந்தேகங்களுக்கு விளக்கம் கிடைக்காது! விலங்கு தான் பூட்டுவோம் என்கிறீர்களா…? அவர் பேசியது விவேக் சாவிற்கு முன்பு! கோடானு கோடி மக்கள் மனதில் இருந்த ஒரு சிறிய சந்தேகப் பொறியைத் தான் அவர் வெளிப்படுத்தியுள்ளார். சமூக வலைத்தளமெங்கும் இதை நீங்கள் காணலாம்! தேனீர் கடை தொடங்கி தெருவீதி சந்திப்புகள் வரை மக்கள் இந்த சந்தேகத்தை தான் விவாதித்து தீர்க்கிறார்கள்! நடிகர் விவேக்கை பொறுத்த வரை அவர் கொரோனா தடுப்பூசியின் அவசியத்தை ...