காய்ச்சல், தலைவலி, வயிற்று வலி, சக்கரை வியாதி ஆகியவற்றுக்கான மருந்துகளை தயாரித்து வந்த தமிழகத்தின் IDPL ஐ – மிக முக்கிய மருந்துகள், மிக மலிவான விலையில் அரசு தயாரிப்பதை தடுக்க தனியார் நிறுவனங்கள் அழுத்தம்தந்ததால் –  பாஜக அரசு முடக்கியுள்ளது. அதை தமிழக அரசு ஏற்று நடத்த அந்த நிறுவனமும், தொழிலாளர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். தயங்குகிறதா தமிழக அரசு..? என்ன நடந்தது..? காய்ச்சலைப் போக்கும் பாரசிட்டமால், சீரண கோளாறுகளுக்கு அல்மாஜெல், சர்க்கரை வியாதிக்கு மெட்பார்மிண் போன்ற நாற்பதுக்கும் மேற்பட்ட  மருந்துகளை, சென்னை நந்தம்பாக்கத்தில் ...