மதம், அரசியல் இரண்டுக்குமே உணர்ச்சிகரமான முட்டாள்தனமான கூட்டம் தேவை! அறிவு, உண்மை இரண்டையும் தொலைத்தவர்கள் தான் இவர்களின் தேவை! அது தான் திருமாவளவன் பாஜக விவகாரத்தில் நடந்து கொண்டுள்ளது. இவர் ஏன் 3,500 வருஷத்திற்கு முன்பு சொல்லப்பட்டதை தற்போது பேசுகிறார்? இந்த காலத்தில் யாருக்கு மனுதர்ம நூல் பற்றித் தெரியும்? அதை யாரும் கடைப்பிடிப்பது இல்லையே..சமூகம் அதைக் கடந்து எவ்வளவோ தூரம் வந்துவிட்டதே..தற்போது எந்த இந்து மத சாமியாரும் அதையெல்லாம் பேசுவதில்லை! எந்த ஆண்மகனும் மனுவைச் சொல்லி மனைவியை மிரட்டுவதில்லை! எல்லோரும் அதையெல்லாம் மறந்துவிட்டனர். சமூகம் அடுத்த ...