சமீபத்தில் ஒரே வாரத்தில் சென்னையை ஒட்டி மூன்று இளைஞர்கள் இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும்பொழுது இறந்தனர். நெஞ்சை பதறவைக்கும் இந்த மரணங்களை நம்மால் ஏன் தடுக்க முடியவில்லை…? ஜனவரி 15-ல் கதிரவன் ஈஞ்சம்பாக்கத்தில் இறந்துள்ளார். ஜனவரி 19-ல் ராஜேஷ், ஏழுமலை இருவரும் தாம்பரம் வரதராஜபுரத்தில் இறந்துள்ளனர். இந்த மூவருக்கும் 4 முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் உள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் 30 சுத்திகரிப்பு தொழிலாளிகள் இதுபோல் இறந்துள்ளனர். ஒரு வேலையில் ஈடுபட்டு இருக்கும்பொழுது இறந்து உள்ளனர் ...