21 வயது வரைக்கும் பெண்ணுக்கு திருமணம் செய்யக் கூடாது என்பது முற்போக்கு முகமுடி கொண்ட படு பிற்போக்கான சட்டம்! காதல் மணத்தை கருவறுக்கத் துடிக்கும் சாதி ஆதிக்க வாதிகளுக்கு இது சாதகமாகலாம்! சட்டவிரோத கரு கலைப்புகளை அதிகப்படுத்தலாம்… இன்னும் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்..? அலசுகிறார் மஞ்சுளா! பெண்களின் திருமண வயதை  உயர்த்த வேண்டும் என்று,  சமதா கட்சியின் ஜெயா ஜெட்லியின் தலைமையிலான பாராளுமன்றக் குழு அரசுக்கு பரிந்துரைத்து உள்ளது. இதுச்  சட்டமானால் 21 வயதுக்கு கீழ் நடைபெறும் திருமணங்கள் குழந்தைத் திருமணம் என்று கருதப்படும். ...

இனி பெண்களுக்கு 21 வயதில் தான் திருமணம் செய்ய வேண்டும் என சட்டம் கொண்டு வருகிறார்கள்! பல வகைகளில் இது நன்மையாக இருந்தாலும், நடைமுறையில் எல்லா சமூகத்திற்கும் சட்டம் சாத்தியப்படுமா..? என துளியும் யோசித்ததாகத் தெரியவில்லை. ஒரு பத்திரிகையாளராக, களப் பணியாளராக சமூகத்தின் பல தளங்களில் பயணப்பட்டவன் என்ற வகையில் இந்த சட்டம் பொதுப் படையாக பார்க்கும் போது சிறந்தது தான் என்றாலும், பெரும்  பாலான மக்களால் மீறப்படக் கூடிய சாத்தியக் கூறுகள் நிறையவே உள்ளது என்பதே நிதர்சனம்! இன்றைய தினம் உண்ணும் உணவின் ...

”சார், உண்மையா? திமுக தேர்தல் அறிக்கையில இப்படி சொல்லி இருக்காங்களா..? நீங்க திமுக தேர்தல் அறிக்கை பற்றி அவ்வளவு விலாவாரியாக எழுதினீங்களே..இதை எப்படி கவனிக்காமல் விட்டீங்க..’’ என்று பதறியவாறு  இரண்டு நாட்களாக எனக்கு வாட்ஸ் அப்பிலும், போனிலுமாக பலர் கேட்ட வண்ணம் உள்ளனர்! பகீரென்றது..இந்த விஷமத்திற்கான வித்து எங்கிருந்து… எப்படி விழுந்தது.. .? என்று பார்ப்போம்; ”இது ரொம்ப ஓவரா இருக்கே இப்படி சொல்ற கட்சி ஆட்சிக்கு வந்துட்டால் நாமெல்லாம் எப்படி கவரவத்துடன் வாழறது’’ என்று டீ கடையில் சூடு பறக்க விவாதம் செய்தவர் ...