சமீபகாலமாக நூற்றுக்கணக்கான கோடிகளை கொட்டி, வன்முறை, ஹீரோ பில்டப், வெற்று ஆரவாரங்களோடு கதை, திரைக்கதை எதுவுமின்றி பிரமாண்ட செலவில் வரும் படங்கள், முதல் நாள் முதல் காட்சியிலேயே தோல்வியை சந்திக்கின்றன! இப்படமோ, கச்சிதமான திரைக்கதை, இயல்பான கதாபாத்திரங்கள், தேர்ந்த கிளைமாக்ஸ்.. என அழகாக எடுக்கப்பட்டுள்ளது; இந்த சினிமாக்களுக்கு மாற்றாக அத்தி பூத்தாற் போல், சில எளிய முதலீட்டு படங்கள் வெளிவரத்தான் செய்கின்றன! மிகக் குறைந்த முதலீட்டில் வெளியான குடும்பஸ்தன், டூரிஸ்ட் பேமிலி போன்ற படங்களை அந்த வகையில் குறிப்பிடலாம். குறிப்பாக டூரிஸ்ட் பேமிலி படம் ...













