எட்டு மணி நேர வேலை நேரம் பறிக்கப் பட்டு விட்டது.இன்றைய மத்திய, மாநில அரசுகள் தொழிலாளர்களின் நியாயமான பல கோரிக்கைகளை கண்டுகொள்வதே இல்லை. ஏற்கனவே இருந்த 44 தொழிலாளர் சட்டங்களை (Act) சுருக்கி 4 சட்டத்தொகுப்பாக (Code) மாற்றிவிட்டது. இதனால் சம்பளம் என்பதன் வரையறை மாறுகிறது. தொழிற்சங்க உரிமைகள் மட்டுப் படுத்தப்படுகின்றன. தொழிலாளர்களோடு நடத்தப்படும் முத்ததரப்பு குழுக்கள் கூடுவதே இல்லை. பொதுமுடக்க காலத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சந்தித்த அவலம் எல்லோருக்கும் தெரியும். இதனை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் தொழிலாளர்கள் ? “அடிமைகளை கொலை ...