நாடறிந்த மக்கள் உரிமைப் போராளி மேதா பட்கர். ” நர்மதா பச்சாவோ அந்தோலன்” அமைப்பின் செயல்பாடு வாயிலாக உலகம் முழுவதும் உள்ள சமூக ஆர்வலர்களின் கவனம் பெற்றவர்! நர்மதா நதியில் கட்டப்பட்ட அணைக்கட்டுகளால் பாதிக்கப்பட்ட  பழங்குடி மக்கள், ஏழை, எளியவர்களுக்காக போராடி, பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப் பட  முக்கியக் காரணமாக இருந்தவர். இவர் மராட்டிய மாநிலத்தை பூர்வீகமாக கொண்டிருந்தாலும்,நாட்டின் எந்த மூலையில் ஒடுக்கப்பட்ட,ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டாலும் அங்கு சென்று அவர்களுக்காக குரல் கொடுக்கத் தயங்காதவர். இதற்காக அவர் நிறுவிய அமைப்பு “மக்கள் ...