நள்ளிரவு நீதிமன்றத்தை நாடி, அதிகாலை இரண்டு மணிக்கு வழக்கு விசாரணை செய்ய வைத்து, நடக்கவுள்ள பொதுக் குழுவை அதிகாரமற்றதாக்கும் வண்ணம், அதிகாலை நான்கரை மணிக்கு தீர்ப்பு பெறப்படுகிறது என்றால், என்ன நடக்கிறது இங்கே? நீதிமன்றத் தலையீடுகளின் வழியே ஒருவரை தலைவராக நிலை நிறுத்திவிட முடியுமா? ஒ.பி.எஸ்சுக்கு பாஜகவில் எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்பதற்கு நள்ளிரவில் நீதிபதிகள் செய்த கட்டப் பஞ்சாயத்தே சாட்சியாகும்! ஒரு கட்சியின் பொதுக் குழு நடக்கிறது. பல லட்சம் தொண்டர்களின் பிரதிநிதிகளான பொதுக் குழு உறுப்பினர்கள் என்ன தீர்மானம் போடலாம், போடக் ...

வேல்முருகன், சுங்குவார் சத்திரம்,காஞ்சிபுரம் நாகலாந்து சம்பவத்தில் அமித்ஷாவின் விளக்கத்தை கேட்டீர்களா? அப்பாவிகள் சென்ற வாகனத்தை தவறுதலாக புரிந்து கொண்டு இராணுவத்தினர் ஆறு பேரைக் கொன்றுவிட்டனர். அதில் கோபமடைந்த கிராமத்தினர் வேன்களுக்கு தீ வைத்துள்ளனர்! இதனால் அவர்களையும் சேர்த்துக் கொன்றுள்ளனர். மாநில போலீசாரை துணைக்கு வைத்துக் கொண்டிருந்தாலே இந்த சம்பவம் தவிர்க்கப் பட்டு இருக்கும்! மாநில அரசு நிர்வாகத்தின் துணையோடு ரோந்து சுற்றி இருந்தால், உயிர்ப்பலிக்கே வாய்ப்பில்லை என உள்ளுர் காவலர்கள் வருந்துகின்றனர். உள்துறை அமைச்சருக்கு இதில் குற்ற உணர்வு கூட இல்லை என்பது தான் ...

ஜி.எஸ்.டி வரிமுறை மாநில அரசின் வரி வசூலிக்கும் அதிகாரத்தை பறித்துக் கொண்டது. கார்ப்பரேட்டுகளின் நன்மைக்காக மாநில உரிமைகளை காவு கொடுக்கிறது! மாநிலங்களை எந்த வகையிலும், சுயசார்பில்லாமல் செய்து, மத்திய அரசிடம் மண்டியிட வைக்கிறது! இந்தியாவில் இதை தட்டிக் கேட்கும் திரானியுள்ள ஒரே மாநிலமாக தமிழகம் உள்ளது! நாளைய கூட்டத்தில் நடக்கப் போவது என்ன..? செப்டம்பர் 17 ந்தேதி ஜி எஸ் டி உயர்மட்டக்குழுவின் 45 வது கூட்டம் நடைபெற உள்ளது. சென்ற கூட்டத்தில் பட்டாசுகள் படபடத்தன.  நமது நிதி அமைச்சர் பிடிஆர்  பழனிவேல் தியாகராஜனின் அனல் ...

ஆகஸ்ட் மாதம் 5 , 2019ல் அதிரடியாக அரசியல் பிரிவு 370 ரத்து, தனி அந்தஸ்து ரத்து, ஜம்மு காஷ்மீர் மாநிலம் -முதன்முறையாக- துண்டாடப்பட்டு மூன்று யூனியன் பிரதேசங்களாக சிறுமைப்படுத்தப்பட்டது. மாநில அந்தஸ்தைஇழந்த காஷ்மீரில் ராணுவம் குவிக்கப்பட்டது. ஊரடங்கு அமுலுக்கு வந்தது. அனைத்து அரசியல் தலைவர்களும்,தொண்டர்களும் இரவோடிரவாக கைது(பா ஜ க தவிர). இன்டரநெட் இணைப்பபிற்கு தடை,பத்திரிக்கைகள் முடக்கம், கவர்னர் போய் லெப்டின்ன்ட் கவர்னர் வந்தார் . ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுவதும் ஒரு சிறைச்சாலையாக மாறியது. இத்தகைய ஒருதலைபட்சமான, தான்தோன்றித்தனமான, அரசியல் சட்டம் ...

நான்கே நாட்களில் நச்சென்று நடந்து முடிந்துவிட்டது, சட்டமன்ற கூட்டத் தொடர்! மிக முக்கியமான அடிப்படை வித்தியாசம் ஒன்றை இந்தக் கூட்டத் தொடர் முழுக்க காண முடிந்தது! அது எதிர்கட்சியினருக்கு அதிக நேரம் ஒதுக்கப்பட்டது! குறுக்கீடுகள் இல்லாமல் அவர்கள் குறைகளை சொல்ல அனுமதிக்கப்பட்டது. இந்த ஆட்சி எந்த திசையில் பயணிக்க உள்ளது என்பது கிட்டதட்ட தெளிவாகிவிட்டது..! இந்த நாகாரீகமான அணுகுமுறைய ஜெயலலிதா மற்றும் எடப்பாடி முதல்வராக இருக்கும் போது பார்க்க முடியவில்லை. எதிர்கட்சியின்ருக்கு போதுமான நேரம் தரமறுப்பது, அவர்களை பேசவிடாமல் குறுக்கீடு செய்வது, கருணாநிதியை தாக்கிப் ...

ஸ்டாலினின் டெல்லி விசிட் உணர்த்தும் உண்மை என்ன..? பிரதமருடனான சந்திப்பால் தமிழ் நாட்டிற்கு பிரயோஜனமுள்ளதா.? என்றால், ஸ்டாலின் தந்துள்ள 25 கோரிக்கைகளில் சரிபாதிக்கு மேற்பட்டவை தற்போதைய ஒன்றிய அரசின் கொள்கைக்கு நேர் எதிரானவை! எதிர்கால கலக அரசியலுக்கான ஒரு கிளியரான மெசேஜ் இந்த கழக ஆட்சி வைத்துள்ள கோரிக்கைகளில் புதைந்துள்ளன..! ”பிரதமர் நம்பிக்கையோடு இருங்கள் என தெரிவித்தார். எதை வேண்டுமானாலும் என்னிடம் நேரடியாகக் கேளுங்கள்’’ என்றார் என முதல்வர் ஸ்டாலின் பெருமிதப்பட்டுக் கொள்ளலாம்! செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனத்தை தமிழக அரசு தானே ஏற்று நடத்தக் ...