பெரும்பாலான பெரிய அணை திட்டங்கள் மக்களுக்கு உதவுவதை விட ஒப்பந்ததாரர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும், நிதி உதவி செய்யும் சர்வதேச நிறுவனங்களுக்கும் தான் பயன்படுகின்றன! மேக்கேதாட்டு விவகாரத்தில் கர்நாடகாவின் மூர்க்கமான முஸ்தீபுகளை வெறும் பெயரளவுக்கு எதிர்த்துவிட்டு பம்முகிறது தமிழக அரசு! பெரும் அணைக்கட்டுத் திட்டங்களில் அனைத்து அரசியல் கட்சிகளும் அடையும் ஆதாயங்களை, மறைக்கப்பட்டு வரும் அந்த உண்மையை ஏற்கனவே மேத்தாபட்கர் துல்லியமாக அம்பலப்படுத்தி உள்ளார்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடகாவில் உள்ள பாஜக, காங்கிரஸ், மஜத போன்ற கட்சிகள் இந்த திட்டத்தின் மதிப்பான 9,000 கோடியில் கணிசமாக ...

9,000 கோடிகள்! அரசியல்வாதிகள், முதலீட்டாளர்கள், ஒப்பந்ததாரர்கள்..ஆகிய முக்கூட்டுக் கொள்ளைக்காகவே மேக்கேதாட்டு அணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கர்நாடகத்தின் காங்கிரஸ், பஜக, மஜத ஆகிய கட்சிகள் தமிழகத்தை எதிர்த்து தங்களை ஹீரோவாக்கிக் கொள்ள மேகேதாட்டுவிற்கான போராட்டங்களை செய்கிறார்கள்! அதாவது ஆளும் பாஜக மட்டுமின்றி எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், மஜத ஆகியவை தங்களின் வாக்கு வங்கி அரசியலுக்காகவும், சுய ஆதாயத்திற்காகவும் தான் இந்த திட்டத்தை செயல்படுத்த முயற்சித்து வருகின்றன அன்றி இதில் பெங்களூருக்கான குடிநீர் தேவைக்காகவல்ல! சமீபத்தில் கர்நாடகவில் இழந்து கொண்டிருக்கும் தன் செல்வாக்கை மீட்க  காங்கிரஸ் கட்சி மேகேதாட்டு அணை ...