மியாவ்’ (Meow) – வளைகுடா நாட்டில் நடைபெறும்  முஸ்லிம் குடும்பக்கதை. வளைகுடா நாடுகளில் வாழும் ஒரு மலையாள இஸ்லாமிய குடும்பத்தின் ஊடல்,மோதல்,கூடல் ஆகியவை மிக இயல்பாக காட்சிபடுத்தப்பட்டு உள்ளது. இஸ்லாமிய அடிப்படை வாதத்தை கேள்விக்கு உள்ளாக்குகிறது. தஸ்தகிர் ஒரு சூப்பர் மார்கெட் வைத்திருக்கிறான். மூன்று குழந்தைகள். மனைவி கோபித்து சென்ற நிலையில், தனது கார் ஓட்டுநரும், உதவியாளருனமான சந்திரேட்டனை  வைத்துக் கொண்டு, குடும்பத்தை நடத்துகிறான். இயக்குனரான லால் ஜோஸ் மிக அழகாக கதையை எடுத்துச் செல்கிறார். கதையில் வில்லன் இல்லை; திருப்பங்கள் இல்லை; மோதல்கள் ...