அடிமாட்டுக் கூலி, அடிப்படை வசதிகளற்ற அவலம், கூடுதல் வேலை,இரக்கமற்ற சுரண்டல், கேட்க நாதியற்ற துயரம், சட்டப் பாதுகாப்பின்மை…இந்தச் சூழல்களுக்கு இடையில் தான் புலம்பெயர் தொழிலாளர்கள் நம்மிடையே கவனிபாரற்று வாழ்ந்து வருகின்றனர். சர்வதேச புலம் பெயர்ந்தோர் நாளான இன்று அவர்கள் படும் பாடுகளை சற்றே பார்ப்போமா…? “கோயமுத்தூரில் உள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் புதிதாக கட்டப்பட்டது. இதன் கட்டுமானத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தைவிட குறைவாகவே வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவரின் கண்முண்ணே நடைபெறும் விதிமீறலை அவர் கண்டுகொள்ளவில்லை. பீகாரில் இருந்தும், ஒரிசாவில் ...