கொரோனாவின் தாக்கம் வீரியம் அடைந்து வரும் இந்த வேளையில், பெருநகரங்களின் ரயில் நிலையங்கள் புலம் பெயர் தொழிலாளர்களால் நிரம்பி வழிகிறது. கடந்த ஆண்டை போல் ஊரடங்கு அறிவிப்பதற்கு முன் சொந்த ஊர் போய் சேர்ந்துவிட வேண்டும் என்ற பதட்டமும் அச்சமும் தொற்றியுள்ளது. அவர்களின் அச்சத்தை போக்கி, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய மத்திய, மாநில அரசுகள் என்ன செய்கின்றன..? புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களுடைய வேலை செய்யும் இடங்களில் இருந்து சொந்த ஊர் திரும்பி ஓராண்டு நிறைவடைந்துவிட்டது . ஆனாலும், அவர்களின் துயரங்கள் தொடர்ந்து கொண்டேதான் ...