தேசமே தீப்பிடித்து எரிகிறது! அக்னிபாத் என்பது இந்திய இளைஞர்களை இன்று அக்னி பிழம்பாக மாற்றியுள்ளது! பாஜக ஆட்சி இராணுவத்திற்கு கன்னாபின்னா என்று அதிக நிதியை ஒதுக்கி, ”ஆயுதங்களுக்கு அதிக நிதியை செலவழிப்போம். ஆனால், அர்ப்பணிப்போடு ராணுவத்திற்கு வரும் வீர்களை அத்துக் கூலிகளாக நடத்துவோம்” என்கிறார்கள்! பீகாரில் தொடங்கி உ.பி.ஹரியானா, ராஜஸ்தான், பஞ்சாப் , இமாச்சசல் பிரதேசம் ,தெலுங்கானா என அனைத்து வட இந்திய மாநிலங்களிலும் இளைஞர்கள் ரயில் மறியல் போராட்டங்களில் குதித்துள்ளனர். ஏராளமான ரயில்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது, வன்முறையும், போலீஸ் தடியடியும் தொடர்கிறது. காரணம், ...

கடுமையான பொருளாதார நெருக்கடி, தகுதிக்கு மீறிய ராணுவச் செலவுகள், ஊழல் நிர்வாகம்.. இதன் தொடர்ச்சியாக இம்ரான்கானின் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது! மதவாத உணர்ச்சிகளைக் கடந்து, மக்கள் சரியான தலைவரை பாகிஸ்தானில் தேர்ந்தெடுப்பார்களா? ராணுவத்தின் சாய்ஸ் யார்? மக்கள் செல்வாக்கு இழந்துவிட்டார் இம்ரான்கான்! பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கான்  அரசுக்கெதிராக எதிர்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை  இம்ரான் கட்சி உறுப்பினர்கள் சிலரே அணி மாறி ஆதரித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, பிரதமர் இம்ரான் கான் பதவி இறக்கப்படுவார் என்பது உறுதியாகிவிட்டது. ஆனால், இம்ரானின் ” கடைசி பந்து ...

அகிம்சைக்கு பேர் போன புத்த மதத்தினர் நிறைந்துள்ள மியான்மரில் தான் இன்றைய தினம் உலகத்திலேயே அதிகமான படுபாதக கொலைகள் நடக்கின்றன! நாளும், பொழுதும் சொந்த நாட்டு மக்களையே ராணுவம் கொத்து, கொத்தாக தீ வைத்து கொன்று குவிக்கிறது. என்ன நடக்கிறது? இந்த இடத்தில் 30 பேர் தீ வைத்து எரிக்கப்பட்டனர், அந்த இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் எரிக்கப்பட்டனர்..என்று இடையறாது செய்திகள் மியான்மர் குறித்து வந்து, மனித இதயங்களை உலுக்குகிறது. மியான்மர் என்று சொல்லப்படுகிற பர்மா தமிழர்களுக்கு மிக நெருக்கமான நாடாகும். அதிக தமிழர்கள் பிரிட்டிஷ் ...