நியாய விலைக் கடைகளான ரேஷனில் சிறுதானியங்கள் விநியோகம் என்பது உணவு கலாச்சாரத்தில் நிகழ உள்ள உன்னத மாற்றத்தின் ஆரம்பம்! மறைந்து போன நமது உணவு பாரம்பரிய கலாச்சாரத்தையும், ஆரோக்கியத்தையும் விவசாயத்தையும் மீட்டெடுக்கும் நீண்ட நாள் கனவு! சிறுதானியங்களான கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, குதிரைவாலி, சாமை, சின்னசோளம், பனிவரகு ஆகிய எட்டு தானிய வகைகள் மட்டுமே சிறுதானியங்களாகும்! அரிசி என்பது முன்பெல்லாம் ஒரளவு வசதி படைத்தவர்கள்,மேல்சாதிக்காரர்களின் உணவாகவே பெரும்பாலும் அறியப்பட்டு இருந்தது! சிறுதானியங்களே பெரும்பாலான உழைக்கும் மக்களின் உணவாக இருந்தது. அவர்களின் கடின உழைப்புக்கும்,ஆரோக்கியத்திரற்கும் ...