கலைஞர் உயிரோடு இருக்கும் போது ஸ்டாலின் முதலமைச்சர் ஆக்கப்பட்டிருந்தால், அது கலைஞர் தயவில் வாரிசாக்கப்பட்டதாக விமர்சனத்திற்கு ஆளாகியிருக்கும். ஆனால், கலைஞர் மறைவிற்குப் பிறகு குதிரை பேர அரசியலில் இறங்கி குறுக்கு வழியில் முயற்சிக்காமல், நான்கு ஆண்டுகள் எதிர்கட்சித் தலைவர் பங்கு பாத்திரத்தை ஒரளவு சிறப்பாக செய்து, தேர்தலை ஜனநாயக முறையில் எதிர்கொண்டு மக்கள் தீர்ப்புடன் அவர் முதலமைச்சர் ஆகியுள்ளது ஸ்டாலினின் ஆளுமைக்கு கிடைத்த அங்கீகாரமாகும். அதிக அனுபவசாலிகளும், புதிய ஆற்றலாளர்களும் சரிவிகிதமாக கலந்து உருவாக்கப்பட்ட அமைச்சரவையை ஸ்டாலின் ஏற்படுத்தியுள்ளார். ஒரு தனி நபராலேயே சிறப்பான ...