கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி இலங்கை தத்தளிக்கிறது. கிட்டத்தட்ட அத்தகைய ஒரு நெருக்கடியை நோக்கி இந்தியாவும் நகர்ந்து கொண்டிருக்கிறது! மூச்சை திணறடிக்கும் வெளி நாட்டுக் கடன்கள், கடுமையான உரத்தட்டுபாடு, வங்கிகளின் வாராக் கடன்கள்…உள்ளிட்டவை மிரட்டுகின்றன! அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் கண்மூடித்தனமான சொத்து குவிப்பும், நேர்மையின்மையும் ஏற்கனவே மக்கள் வாழ்க்கையை பின்னுக்கு தள்ளியுள்ளது ஒரு புறமிருக்க, நமது தற்சார்பின்மையும், இறக்குமதியை நம்பியே விவசாயம், பார்மஸி, பெட்ரோலியம்..உள்ளிட்ட பல துறைகள் இயங்குவதும் நமக்கு பல சிக்கலை தந்து கொண்டுள்ளன. வருங்காலத்தில் இவை வீரியமடையும். மேலும் நாம் அளவுக்கு ...
“போக்குவரத்து துறை பத்தாண்டுகளாக படு நஷ்டத்தோடு இயங்குகிறது.. அதிக பணியாளர்கள், ஓய்வூதியம், டீசல், வட்டிச் செலவினங்கள் போன்ற காரணங்களால் கடந்த 10 ஆண்டுகளில் தொடர்ந்து இழப்புகள் ஏற்பட்டுள்ளன.” என்று நிதி அமைச்சர் ப.தியாகராஜன் சமீபத்தில் தெரிவித்துள்ளார். இது எந்த அளவுக்கு உண்மை? ஏன் இந்த நஷ்டம்? எப்படி ஏற்படுகின்றது நஷ்டம்..? என்பதை இங்கு விளக்குகிறார் சிஐடியு தொழிற்சங்கத்தைச் சார்ந்த கே.ஆறுமுக நயினார் . மாணவர்களுக்கு இலவசப் பயணம், பெண்களுக்கு இலவசப் பயணம், உழவர் சந்தைகளுக்கு, பேருந்துகளில் விவசாயிகள் காய்கறிகளை இலவசமாக எடுத்துச் செல்லலாம்…, மாற்றுத் ...
மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன..! ஆக்சிஜன் பற்றாகுறையாலும், ஆளுமை பற்றாகுறையாலும் கொத்து, கொத்தாக மரணங்கள்…! முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எதையும் செய்யாமல், மக்களின் உயிர்பாதுகாப்பை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்துவிட்டு.., அயோத்தி, காசி, மதுரா..என்று ஒவ்வொரு அஜெண்டாவையும் அரங்கேற்றிச் செல்கிறது பாஜக அரசு..! இந்த ஓராண்டு கால அவகாசத்தில் பேரிடர் கால நிர்வாகத்திற்கான அனுபவத்தையோ, அறிவையோ ஏன் பெறவில்லை என்று பலர் கேட்கிறார்கள்! அதில் விருப்பமில்லாத அரசுக்கு எத்தனை ஆண்டு அவகாசம் தந்தாலும், எத்தனை பெருந்தொற்று வந்து எத்தனை பேர் மடிந்தாலும் அது எதையும் கற்காது! காலரா, ...