சட்டத்திற்கு அப்பாற்பட்டு செயல்பட சட்டபூர்வமாக தங்களுக்கு கிடைத்த அதிகாரத்தை பயன்படுத்திக் கொள்வதற்கு பெயர் தான் பி.எம்.கேர்ஸ் பண்ட்! ”அரசாங்கத்தின் அதிகாரம் எங்களுக்கு தேவை! ஆனால், அரசின் சட்டங்கள்,கட்டுப்பாடுகள் எங்களுக்கு தேவையற்றது! எங்களை தணிக்கைதுறை கட்டுப்படுத்தக் கூடாது. தகவல் அறியும் உரிமை சட்டம் கேள்வி கேட்கக் கூடாது! இப்படி தானடித்த மூப்பாக செயல்படுவதற்கான ஒன்றை உருவாக்கி கல்லா கட்டத்தானே பதவிக்கே வந்தோம்..” என்பவர்களிடம் என்ன பேச முடியும்? நாட்டுத் தலைமையே இந்த லட்சணம் என்றால், அப்புறம் தனி முதலாளிகளை யார் கேட்பது..? கொரோனா தொடர்பான ஆராய்ச்சி ...

தேசத்துரோக சட்டம் மறுஆய்வு செய்யப்பட வேண்டும்  உச்ச நீதிமன்றத்தின் அடுத்த சம்மட்டி அடி ! இன்னும் சுதந்திர நாட்டில் தான் வாழ்கிறோமா அல்லது அடிமை இந்தியாவில் வாழ்கிறோமா என சந்தேகப்படும்படி பிரிட்டிஷ் அரசு இந்திய சுதந்திரப் போராட்டத்தை அடக்க 1870 ஆம் ஆண்டு கொண்டு வந்த தேச துரோக வழக்கை தற்போதும் மத்திய,மாநில அரசுகள் எடுத்ததற்கெல்லாம் பயன்படுத்தி வருவதை உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளதன் பின்னணியில் அதிமுக, பாஜக அரசுகள் ஆடிய ஆட்டங்கள் கொஞ்சமா.. நஞ்சமா..? கடந்த 4 மாதங்களாக இந்திய நீதித்துறையின் ...