சுதந்திர  இந்தியாவில் எழுபதாண்டுகளுக்கும் மேலாக இரு மாநில எல்லை முடிவிலா வன்மமாகத் தொடர்கிறது! ”எங்கள் பகுதிக்குள் ஊடுருவாதே.. நிலத்தை அபகரிக்காதே..” என மிசோராம் மக்கள் கொந்தளிக்கின்றனர். இந்திய-பாகிஸ்தான் எல்லை மோதல் போல, அஸ்ஸாம் , மிசோரம் அண்டை மாநிலங்கள் என்பது மாறி, அந்நிய நாடாக அடித்துக் கொண்டனர்!  மோதலில் அசாம் போலீசார் ஆறு பேர் உயிரிழப்பு, 50க்குமேற்பட்ட காவலர்கள் படுகாயம்!  ஏன் இந்த மோதல்? என்ன காரணம்? அசாம் மற்றும் மிசோரம் இடையே 165 கி.மீ நீள எல்லை உள்ளது. கோலாசிப், மாமித் மற்றும் அய்சுவால் ...