தினமலர் தொடங்கி எல்லா அக்கிரஹார பத்திரிகைகளிலும் முதல் பக்க செய்தியாக மு.க.அழகிரியின் மதுரை கூட்ட பேச்சு வெளியாகியானது..! இனி தொடர்ந்து அழகிரியின் ஒவ்வொரு அசைவுகளையும் இந்திய ஜனாதிபதிக்கான முக்கியத்துவத்துடன் இவர்கள் போடுவார்கள்….! ஆனால், நேற்று வரை அவரை ரவுடி என்றும், மதுரையை ஆட்டிப் படைத்த அராஜக அரசியல்வாதி என்றும் எழுதியவர்கள் இவர்களே! கருணாநிதி மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நேரத்தில் அவரை காண வந்த குருமூர்த்தி அப்போதே அழகிரியை தனி அறைக்கு அழைத்துச் சென்று ஒரு மணி நேரம் தனிமையில் பேசினார். ரஜினி அரசியலுக்கு ...