ஐந்து முறை எம்.எல்.ஏவாக இருந்தும் எளிமை மாறாதவர்! எத்தனையோ நன்மைகளை கரிசல் மண்ணுக்கும், மக்களுக்கும் பெற்றுத் தந்தவர்! சோ.அழகர்சாமியின் வாழ்க்கையோடு, கோவில்பட்டியின் வரலாற்றையும் சொல்கிறார் காசி விஸ்வநாதன். கோவில்பட்டி என்றதும் நினைவுக்கு வருவது, அங்கு நடைபெறும் பாரதி விழாதான் . அங்கு பல ஆண்டுகளாக பாரதி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு அடித்தளமிட்டவர் சோ.அழகர்சாமி. ஐந்து முறை சட்ட மன்ற உறுப்பினராக இருந்துள்ள இவர், எளிய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் கூட்டுறவு அமைப்புகளை செயலூக்கத்துடன் உருவாக்கியவர். விவசாயிகள் சங்கத் தலைவராகவும் இருந்தவர். சோ.அழகர்சாமியைப் பற்றிய ...
இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஊதியத்தில் கொரானா பொருளாதார நெருக்கடியில் நாடும், மக்களும் இருப்பதை உத்தேசித்து தங்கள் ஊதியத்தை 30% குறைத்துக் கொள்ளும் தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது! இன்றைய சட்டமன்றத்தில் நடந்தது என்ன? பாராளுமன்றத்தில் நடந்தது என்ன? மற்ற மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் பெறும் சம்பளம் எவ்வளவு..? ஆகியவை குறித்து அலசுகிறது இந்தக் கட்டுரை! தமிழக சட்டசபைக் கூட்டம் இன்றைய தினம் கலைவாணர் அரங்கத்தில் விஷேச ஏற்பாடுகளுடன் சிறப்பான வகையில் கூடியது! ஆனால், இன்று கூடிய தமிழகச் சட்டமன்றத்தில் எம்.எல்.ஏக்களின் ஊதியக்குறைப்பு தொடர்பான எந்த முன்னெடுப்போ,விவாதமோ கூட எழவில்லை! ...
வெறும் சம்பிரதாயத்திற்காக, ஒரு சடங்கை நிறைவேற்றுவது போல, நாங்களும் சட்டமன்றத்தில் ஜனநாயக பூர்வமாக எதிர்கட்சியோடு விவாதித்து மக்கள் பிரச்சினைகளை கேட்டறிந்து தான் செயல்படுகிறோம் என்று காட்டிக் கொள்வதற்காக மூன்று நாட்கள் கலைவாணர் அரங்கத்தில் கூடவுள்ளது சட்டமன்றம்! இதில் முதல் நாள் இறந்த சட்டமன்ற உறுப்பினர்கள்,தலைவர்களுக்கான இரங்கல் நிகழ்வில் போய்விடும்! அடுத்த இரண்டு நாட்களில் ஏராளமான சட்ட மசோதாக்கள் அவசர கதியில் அறிவிக்கப்பட்டு விவாதமின்றி நிறைவேறவுள்ளது. முக்கியமாக எட்டுமாதத்திற்கான துணை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் என்னென்ன விடுபட்டுள்ளது,எவற்றை கூடுதல் கவனப்படுத்த வேண்டும் என்றெல்லாம் ...