வேல்முருகன், சுங்குவார் சத்திரம், காஞ்சிபுரம் உக்ரைன் விவகாரத்தில் பெரும்பாலான அமெரிக்க ஆதரவு பார்வையில் பத்திரிகைகள் ரஷ்யாவை சாடுகின்றன. நீங்கள் அமெரிக்கா பக்கமா? ரஷ்யா பக்கமா? உக்ரைனுக்கு நீண்ட கால நோக்கில் எது நல்லது, பாதுகாப்பானது என பார்க்க வேண்டும். இந்த கண்ணோட்டத்தில் உக்ரைன் இப் பிரச்சினையை கையாண்டிருந்தால் ரஷ்யா அத்துமீறி இருக்காது. அமெரிக்க,ஐக்கிய நாடுகள் வலையை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு ரஷ்யாவிடம் பேரம் பேசி உக்ரைன் நலன்களை பேணி இருக்க வேண்டும். இது அண்ணன் தம்பி சண்டை! விரைவில் இருவரும் கைகோர்க்கவும் வாய்ப்புண்டு! ...

அரசியல் ஈடுபாடு என்பது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஆழ் மன உந்துதலில் இருந்து வந்தால்..அப்படிப்பட்டவர் அதை ஈடேற்றுவதற்கான அதிகாரத்தை பெறுவதற்கு தனக்கான சகாக்களை சரியாக அடையாளம் கண்டு அரவணைத்துக் கொள்வார்! அப்படி இல்லை என்றால், அவர் அன்னியர்களை நம்பி தன்னையே அழிவுக்கு உள்ளாக்கிக் கொள்வார்! சமீபகாலமாக தேர்தல் வியூக வகுப்பாளர்கள் என்ற புதிய தொழில் ஒன்று உருவாகி அரசியல் தலைவர்களை ஆட்டுவித்து வருகிறது! 2014 ஆம் ஆண்டு பிரசாந்த் கிஷோர் என்பவர், அன்றைய பாஜகவின் புதிய பிரதமர் வேட்பாளர் மோடியை பிரமோட் ...

கமலஹாசனின் உண்மையான பலம் தெரிந்துவிட்டது. அவரைத் தவிர அனைத்து தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் டெபாசிட் பறி கொடுத்துள்ளனர்! நிற்க முடிந்த தொகுதிகளே 141 தான்! அதிலும் பல தொகுதிகளில் உள்ளூர் ஆட்கள் கிடைக்காமல் வெளியூர் ஆட்களே நின்றனர். அந்தளவுக்கு தான் கட்சியின் கட்டுமான பலம் இருந்தது. மீதியுள்ள தொகுதிகளை கல்வி சுரண்டலுக்கு பேர் போன எஸ்.ஆர்.எம்.குழுமத்தின் பச்சைமுத்து மகனுக்கும், சாதி சந்தர்ப்பவாத அரசியல்வாதியான சரத்குமாருக்கும், போக்கிடம் தெரியாமல் புலம்பிக் கிடந்த கே.எம்.செரிப்பிற்கும் தந்தார். ஏழு தொகுதிகளுக்கு நிற்க ஆளே கிடைக்கவில்லை! இப்படிப்பட்ட ...

2021 தேர்தல், இது வரையிலான தேர்தல்களில் இருந்து பல வகைகளில் மாறுபட்டது! அதிகமான விளம்பரங்கள், நுட்பமான பண விநியோகங்கள், கட்சிகளை இயக்கிய தேர்தல் வியூக நிறுவனங்களின் அதீத தலையீடுகள், ஊடக அறம் உருக்குலைந்த நிகழ்வுகள், மத உணர்வு சார்ந்த பிரச்சாரங்கள், சாதி உணர்வின் பங்களிப்புகள், ஒவ்வொரு கட்சியையும் குறித்த வாக்காளர்களின் மதிப்பீடுகள், தேர்தல் ஆணையத்தின் திணறல்கள்..ஐந்து முனைப் போட்டிகள்…இவை அனைத்தையும் குறித்த பார்வையே இந்தக் கட்டுரை; திகட்ட வைத்த விளம்பரங்கள்; விளம்பரங்களுக்கு மிக அதிகமாக அள்ளி இறைக்கப்பட்டது! அரசாங்கப் பணத்தைக் கொண்டு வெற்றி நடை ...

ஒருவரின் யோக்கியதையை அவருடைய கூட்டாளிகளை வைத்து முடிவுக்கு வரலாம்! கமலிடமிருந்து அரவிந்த் கேஜ்ரிவாலும்,யோகேந்திர யாதவும், ’’வேண்டாம் ஐயா உம்ம சங்காத்தம்’’ என்று ஒதுங்கி போனதற்கான பின்ணணிகளை அலசுகிறது இந்தக் கட்டுரை! தன்னை நேர்மையாளராக தானே பிரகடனப்படுத்திக் கொண்டவர் கமலஹாசன்! வருமானத்திற்கு நேர்மையாக வரி கட்டுபவராகவும் சொல்கிறார்! நேர்மையான ஆட்சியை தன்னால் தான் தரமுடியும் என்கிறார்! ஒருவர் நேர்மையாளரா…? என்பதை பொதுவாக அவருடைய கூட்டாளிகளைக் கொண்டே ஒரு தெளிவுக்கு நாம் வரமுடியும். கட்சி தொடங்கும் போது அரவிந்த் கேஜ்ரிவால், மம்தா பானர்ஜி, ராகுல் காந்தி, பினராய் ...

‘அப்பப்பா..என்ன மாதிரி புனிதமானவருய்யா கமல்…’ அப்படின்னு நாம் புளகாங்கிதமடைவோம்னு அவர் நினைக்கிறாரு போல! ”அரசியல் எனக்கு தொழில் இல்லை. என் தொழில் சினிமா. நான் வெற்றி பெற்றாலும் நடிக்கச் செல்வேன்.அந்த சம்பாத்தியத்தில் வாழ்வேன்’’ என்கிறார் கமல். இதன் மூலம் அரசியலை தொழிலாக எடுத்துக் கொண்டு இயங்க முடியாத அவரது மனநிலை நமக்கு நன்றாகவே தெரிய வருகிறது! முதலாவதாக அரசியலைத் தொழிலாகக் கொள்வதை இழிவாக கருதும் மனநிலையில் இருந்து அவர் விடுபட வேண்டும்! முதலில் தனக்குத் தானே சூட்டிக் கொண்ட புனித பிம்பத்தில் இருந்து கமலஹாசன் ...

மக்கள் நீதி மய்யத்தில் தர முன் வந்த 18 தொகுதிகளை புறக்கணித்துவிட்டு, அம்மகவில் ஆறு சீட்டுகளுக்கு ஒத்துக் கொண்டது ஏன்..? என்பதற்கு எஸ்டிபிஐ கட்சி வட்டாரத்தில் கூறியதாவது; அவர்கள் 18 தொகுதிகள் தர முன் வந்தது உண்மை தான்! ஆனால், நாங்கள் தான் தவிர்த்துவிட்டோம்! காரணம், அங்கே நாங்கள் சென்ற போது ஒரு கட்சி அமைப்புக்கான அட்மாஸ்பியரே அங்கு இல்லை! ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தினரின் அணுகுமுறையே அவர்களிடம் பக்காவாக வெளிப்பட்டது. தேர்தல் கூட்டணி பகிர்வு என்பதை கட்சிகளோடு தான் வைத்துக் கொள்ள முடியும்! ஒரு ...

கமலஹாசனின் சூட்சும அரசியல், நுட்பமான காய் நகர்த்தல்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியாதது! மதுரையில் இன்று தேர்தல்பிரச்சாரத்தை துவங்கிய கமலஹாசனிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர்! கேள்வி; ஆன்மீக அரசியலும் மக்கள் நீதி மையமும் ஒன்றிணையுமா? கமல்; கட்சிகள் பிளவுபடவும் வாய்ப்புள்ளது, அணி கூடவும் வாய்ப்புள்ளது! இப்போதைக்கு இது தான் சொல்ல முடியும். இந்த பதிலில் என்ன புரிந்து கொள்வது? இன்னொருபக்கம் கட்சி ஆரம்பிக்கவுள்ளேன் என காலந்தாழ்ந்து அறிவித்த நிலையிலும் கூட, அதற்கான முன்னேற்பாடுகளை முன்னின்று செய்யாமல் அண்ணாத்தே படப்பிடிப்புக்கு கிளம்பி சென்றுள்ளார் ரஜினி! அதனால், ...

பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது என்ன? சினிமா,சீரியலுக்கும்,இதுக்கும் என்ன வேறுபாடு? இது சமூகத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது தனிமனிதர்கள் உளவியலில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது..போன்ற கேள்விகளுக்கு நாம் சரியான விடையை கண்டுபிடித்துவிட்டால்…இந்த சமூகமும்,தனிமனிதர்களும் பல ஆபத்துகளில் இருந்து தப்பிக்கலாம்! இந்த சமூகத்தை அதன் இயல்பிலிருந்து தடம்புரள வைத்து, தாங்கள் கட்டமைக்க விரும்பும் சமூக கலாச்சாரத்தை பரப்பும் கார்ப்பரேட்களின் நோக்கங்களில் ஒன்று தான் பிக்பாஸ்! சினிமா,சீரியல் போன்றவை சில கற்பனை கதாபாத்திரங்களை உருவாக்கி,அதில் பொருந்தி  நடிக்கக் கூடிய நடிகர், நடிகர்களைக் தேர்வு செய்து உருவாக்கப்படும் ...

கமலஹாசன் எதற்காக அரசியல் கட்சி நடத்துகிறார் என்பது புரியாத புதிராக உள்ளது! ஒரு அரசியல் இயக்கத்தைப் பற்றிய அடிப்படை புரிதலாவது அவருக்கு இருக்கிறதா தெரியவில்லை! தனிமையே இனிமை என நினைப்பவர் தலைவனாக முடியுமா? கட்சி அமைப்புகளை கூட இன்னும் சரியாக கட்டி எழுப்ப ஆர்வம் காட்டாமல், மூன்று சதவிகித வாக்குவங்கியைக் வைத்துக் கொண்டு முதலமைச்சராக ஆசைப்படுகிறார்.எதற்கும் ஆசைப்படுவது தவறல்ல, சிகரத்தில் ஏற ஆசைப்பட்டால் அதற்கான சிரத்தையாவது இருக்க வேண்டுமல்லவா? அரசியலில் துரும்மைக் கூட சாதிக்காமல், விரும்பிய பதவியை அடையத் துடிக்கும் மனநிலை அவருக்கு எங்கிருந்து ...