கர்நாடகாவின் எடியூரப்பா, உத்திரகாண்டின் திரிவேந்திர சிங், அஸ்ஸாமின் சர்வானந்தா ஆகியோரைத் தொடர்ந்து அதிரடியாக குஜராத்தில் விஜய் ரூபானி முதல்வர் பதவியிலிருந்து தூக்கப்பட்டுள்ளார். ஏதோ ஒரு சதுரங்க ஆட்டத்தில் கிங் வீழ்த்தப்படுவது போல மோடியும், அமித்ஷாவும் தங்கள் சி.எம் கேமில் காய்களை நகர்த்திக் கொண்டுள்ளனர்! குஜராத்தில் நடந்த அரசியல் என்ன..? குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி திடீர் ராஜினாமா ஊடகங்களுக்கே ஒரு ஆச்சரியத்தை கொடுத்த செய்தியாகும்! அரசியல் சாணக்கியர்களாக மீடியாவால் பாராட்டப்பட்ட மோடி – ஷா தலைமை இந்த முடிவிற்கு வர என்ன காரணம்? ...