உலக தலைவர்களுக்கெல்லாம் தலைவர்! – உலக நாடுகள் அனைத்திற்கும் நண்பன் – விஸ்வ குரு, விஸ்வமித்திரன். மோடியின் நண்பர் தான் டிரம்ப் என்றெல்லாம் மோடி பக்தர்கள் பீற்றிக் கொண்டிருக்கையில், டிரம்ப்பின் அதிரடி வரி விதிப்பு மோடியின் இமேஜை அடித்து நொறுக்கியுள்ளது. ‘மோடியை வச்சு செஞ்சிருக்கார் டிரம்ப்’. ஏன், எதனால்? இந்தியா மீதான அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி அறிவிப்பு பல கேள்விகளை எழுப்பியுள்ளது. மோடி பக்தர்களுக்கு இது ஏன் நிகழ்ந்தது என்பதை புரிந்துகொள்ள இயலவில்லை. இந்தச் சூழலில் இந்தியா, அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை வெற்றிகரமாக ...













