மழைக் காலம் வந்தால் புயல் வருமா?, வெள்ளம் வந்து வீட்டில் மழைநீர் புகுந்துவிடுமா?, மரம் சாய்ந்துள்ளது, சுரங்கப்பாலம் முழுவதும் நீரில் மூழ்கி உள்ளது அதனால் இங்கிங்கே செல்ல வேண்டாம் என்று தொலைக்காட்சியில் பிரேக்கிங் செய்தி ஓடிக்கொண்டிருக்கும். விளிம்புநிலை மக்களுக்கு அரசு, தனி நபர்கள், தொண்டு நிறுவனங்கள் ஆங்காங்கே உணவு வழங்குகிறார்கள். மழைக் காலம், கோடைக் காலம், குளிர் காலம் இப்படி எந்த காலம் வந்தாலும் பேச்சு மனிதர்களைச் சுற்றியே இருக்கின்றது. ஆனால், இந்த உலகில் மனிதர்கள் கூடவே கோடிக்கணக்கான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன!. நம் ...