கெளரி லங்கேஷ் படு கொலையை மையமாக்கி ஒரு அரசியல் படத்தை புதிய கோணத்தில், புதிய தளத்தில் காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் இந்து! இவர் மலையாள சினிமாவின் இன்னொரு நம்பிக்கை நட்சத்திரம். ஒரு மக்களுக்கான படைப்பாளி இறந்த பிறகு தன் படைப்பால் வாழுவதை உயிர்ப்போடு சொல்கிறது படம்! மலையாளத்தில் வெளியாகி இருக்கும் 19(1)(A) திரைப்படம் வலுவான திரைமொழியோடும் தீவிரமான அரசியல் படமாகவும் வந்திருக்கிறது. விஜய்சேதுபதி, நித்யாமேனன் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தை இயக்கியிருப்பவர் அறிமுக இயக்குனர் வி. எஸ். இந்து. எளிய நீரோடையைப் போன்ற கதை. முக்கிய ...
மலையாள சினிமாக்களில் மீண்டும் ஒரு அற்புதம் நிகழ்ந்து இருக்கிறது. ஒரு இனிய குடும்பத்தில் நிகழும் யதார்த்தமான சம்பவங்கள் மிக உயிர்ப்புடனும், இயல்பான நகைச்சுவையுடனும் சொல்லப்பட்டு உள்ளது. கண்ணையும் காதையும் கிழிக்கும் போலிப் பிரம்மாண்டங்களுக்கு மத்தியில் அசத்தலான படம்! தென்னிந்திய சினிமாக்களில் மலையாள மொழியில் வெளிவரும் படங்கள் எப்போதுமே தங்களது தனித்தன்மையை பாதுகாப்பதில் அதிக முனைப்பு கொண்டவை. சமீபகாலமாக அங்கு வெளிவரும் படங்கள் மலையாள சினிமாவில் புதிய அலையை உருவாக்கி இருக்கின்றன என்றால் அது மிகையில்லை. பகத் பாசி, திலீஷ் போத்தன், மகேஷ் நாராயணன், ஜீத்து ...
ஆதிவாசிகள் ஆட்சியாளர்களால் ஏமாற்றப்பட்டு வருவதை தோலுரித்துக் காட்டும் சிறந்த அரசியல் திரைப்படம்! தங்கள் நிலவுரிமையை மீட்டெடுக்க நான்கு ஆதிவாசி இளைஞர்கள் நிகழ்த்திய அதிரடி சாகஸம் தான் இந்தப் படம்! சுமார் 26 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிஜ சம்பவம் தான் தற்போது சினிமாவாகியுள்ளது! ‘ பட’ மலையாளப்படம் தற்போது பிரைம் தளத்தில் ஓடிக் கொண்டு இருக்கிறது. பட என்ற சொல்லுக்கு படை என்பது பொருள். ‘அய்யங்காளி படை’ என்ற அமைப்பைச் சார்ந்த நான்கு பேர் மாவட்ட ஆட்சித்தலைவரை, அவரது அலுவலகத்திலேயே பணயக் கைதியாக்கி வைத்திருக்கிறார்கள். ...
‘ஜல்சா’ என்பதற்கு ஒன்று சேர்தல் எனப் பொருள்! படு விறுவிறுப்பான இந்த இந்திப் படம் ஓடிடி தளத்தில் ஒடுகிறது! மனித நேயமின்றி மனசாட்சியை அலட்சியப்படுத்தும் போது, குற்றவுணர்வு எப்படி கொன்று போடுகிறது என்பதும், இப்படிப்பட்டவர்களை மன்னிப்பதா? வேண்டாமா? என்பதும் உயிர்ப்போடு சொல்லப்படுகிறது! மும்பையின் உயர் வகுப்பை சார்ந்த ஒரு ஊடகவியலாளராக வித்தியாமேனன் நடித்துள்ளார். இவர் இரவில் ஒரு இளம் பெண் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்தி விடுகிறார். அவரிடம் பணி புரியும் சமையலரின் பெண் தான் விபத்திற்குள்ளானவள்! தன்னிடம் உண்மையை மறைக்கும் முதலாளியம்மா ...
மியாவ்’ (Meow) – வளைகுடா நாட்டில் நடைபெறும் முஸ்லிம் குடும்பக்கதை. வளைகுடா நாடுகளில் வாழும் ஒரு மலையாள இஸ்லாமிய குடும்பத்தின் ஊடல்,மோதல்,கூடல் ஆகியவை மிக இயல்பாக காட்சிபடுத்தப்பட்டு உள்ளது. இஸ்லாமிய அடிப்படை வாதத்தை கேள்விக்கு உள்ளாக்குகிறது. தஸ்தகிர் ஒரு சூப்பர் மார்கெட் வைத்திருக்கிறான். மூன்று குழந்தைகள். மனைவி கோபித்து சென்ற நிலையில், தனது கார் ஓட்டுநரும், உதவியாளருனமான சந்திரேட்டனை வைத்துக் கொண்டு, குடும்பத்தை நடத்துகிறான். இயக்குனரான லால் ஜோஸ் மிக அழகாக கதையை எடுத்துச் செல்கிறார். கதையில் வில்லன் இல்லை; திருப்பங்கள் இல்லை; மோதல்கள் ...
Home – ஆண்ட்ராய்டு போனைச் சுற்றி ஒரு குடும்பக் கதை! குடும்பத்தில் ஒருவருக்கொருவர் புரிதலையும், அன்னியோனியத்தையும் எப்படி கையாள்கிறோம் என்ற சுய பரிசீலனைக்கு நம்மை இந்தப் படம் கொண்டு செல்கிறது! தங்கள் சுய நலத்தை மட்டுமே மையப்படுத்தி சிந்திக்கும் இளம் தலைமுறையும், சகிப்புத் தன்மையுடன் அன்பை வெளிப்படுத்தும் முந்தைய தலைமுறையும் மிக இயல்பாக வெளிப்படுகின்றனர் இந்த குடும்பக் கதையில்! Home என்ற மலையாளப் படம் சமீபத்தில் வெளிவந்துள்ள படம். அமேசான் தளத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு போன் ஒரு குடும்பத்தை எப்படி பாதிக்கிறது என்பதுதான் கதை. ...