ஜெய்பீமையே தூக்கி சாப்பிடும்படியான அசாதாரணமான சம்பவங்களைக் கொண்டது கோகுல்ராஜ் கொலை வழக்கு! சம்பந்தப்பட்ட கொடூர கொலைக் குற்றவாளி யுவராஜுக்கு பின்னணியில் தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசும், அதிகார வர்க்கமும், செல்வாக்கான சமூக கட்டமைப்பும் செய்த ஆதிக்கம் கொஞ்ச நஞ்சமல்ல! நம்ப முடியாத சம்பவங்களும், சாகஸ காட்சிகளும், திகில் நிறைந்த வரலாறும் கொண்டது இந்த வழக்கு! அனேகமாக யுவராஜீக்கு கோகுல்ராஜ் முதல் கொலையாக இருக்க முடியாது. இது போன்ற ஆணவக் கொலைகளுக்காகவே அந்த சமூகத்தால் மாவீரன் என்றும், எழுச்சி நாயகன் என்றும், அந்த சமூகத்தின் இதய துடிப்பாகவும் ...

அவன் நன்றாக படித்த இளைஞன், ஹிந்து மதத்தை சேர்ந்தவன், உ.பியின் கொராக்பூர் உனாவுலி கிரமத்தில் கிராம பஞ்சாயத்து செயலாளரும் கூட! பார்க்க அழகான தோற்றம் கொண்டவன்! பெயர் அனிஷ் கன்னோஜியா! முதலமைச்சர் ஆதித்திய நாத்தை நேரடியாக சந்தித்து பேசும் அளவுக்கு  ஆர்.எஸ்.எஸ்சின் தீவிர செயற்பாட்டாளர்! அவனை தீப்தி மிஸ்ரா என்ற பெண் காதலித்தாள்! அவனும் அவள் அழகால், பேச்சால் ஈர்க்கப்பட்டான்! எனினும், அந்தக் காதலை பெண் பிராமண குலம் என்பதால், அவன் முதலில் தவிர்த்துப் பார்த்தான். ஆனால், காலப் போக்கில் காதலில் வீழ்ந்தான். இருவரும் ...