இது லாகப் டெத் கூட இல்லை! நடு ரோட்டுச் சாவு அல்லது கொலை. சாத்தான்குளத்தில் ஒலித்த சாவு மணி ஏத்தாபூரில் ஏகத்திற்கும் தொடர்கிறது என்பது மட்டுமல்ல, இன்னும் அது தொடர்ந்து கொண்டே செல்வதற்கான சாத்தியக் கூறுகளே அதிகம்! இப்படி நிதானமின்றி நடந்தால் அதிகபட்சம் தற்காலிக பணி நீக்கம் தானே..பார்த்துக் கொள்ளலாம்! நான் போலீஸ், ஆகவே, நான் யாரையும் அடிக்க,உதைக்க உரிமையுள்ளவன். கொன்றாலும் நான் கொலைகாரனாக கருதப்பட்டு தண்டிக்கபடமாட்டேன் என்ற எண்ணம் காவலர்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது போலும்! ஒவ்வொரு நாளும் ஏதேனும் சில இடங்களில் ...