இஸ்லாமியர்கள்  என்றாலே  காவல்துறையும், உளவுத்துறையும், நீதிமன்றங்களும், சிறைத்துறையும், அரசு நிறுவனங்களும் எதிர்மறை சிந்தனையோடு பிரச்சினையை  அணுகுகின்றன. இதனை பொதுமக்களுக்கு விளக்க வேண்டிய ஊடகங்களும் பாராமுகமாக இருக்கின்றன.போதாக்குறைக்கு சினிமாக்கள் வேறு படுமோசமாக சித்தரிக்கின்றன..! ஆனால், அனைத்து மக்களுக்குமான பொது நீதி என்ற மனிதநேய அணுகுமுறையோடு நாம் இஸ்லாமிய சிறைவாசிகளின் நிலைமைகளை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. தமிழக அரசு 10 ஆண்டுகள் தண்டனை கழித்திட்ட  ஆயுள் சிறைவாசிகளை பொதுமன்னிப்பில்  முன்விடுதலை செய்ய விதித்த தகுதிகள் 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும்  தங்களுக்கும் இருப்பதால்  தங்களையும் விடுதலை ...