காவல்துறை என்பது ஜனநாயகம் மறுக்கப்பட்டதாகவே கட்டமைக்கப்பட்டு உள்ளது! இந்தியாவிற்கு கிடைத்த சுதந்திரம் இன்னும் இங்கு காவல்துறைக்கு வரவில்லை. நிலப் பிரபுத்துவ பண்ணைச் சமூக மனநிலையில் உழலும் போலீஸ் உயர் அதிகாரிகள் ஆயிரக்கணக்கான காவலர்களை ஆர்டர்லியாக வீட்டு வேலைக்கு வைத்துள்ளனர்! சுமார் 45,000 ரூபாய் அளவுக்கு சம்பளம் பெற்று வரும் காவலர்கள் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ள தருணத்திலும் கூட மக்கள் பணி செய்ய முடியாமல் உயர் அதிகாரிகள் வீட்டில் தோட்டப் பணிகள், வீட்டு வேலைகள், காய்கறிகள், மளிகை சாமான்கள் வாங்குவது, குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்றுவிட்டு ...

குழந்தை பேறு காலகட்டத்தில் பெண்கள் சந்திக்கும் சவால்கள் அதிகம். அந்த காலகட்டத்தில் பக்குவமாக சாப்பிட வேண்டியவற்றையும், தவிர்க்க வேண்டியவற்றையும் தெரிந்து கொண்டால் சிக்கல்கள் தீரும்! சுகமான குழந்தைப் பேறு கைகூடும்! பருவமடைதலில் தொடங்கி திருமணத்துக்குப் பிறகு குழந்தைப் பேறு, பிரசவம், மெனோபாஸ் என பெண்களின் வாழ்க்கையில் சுமார் 40 ஆண்டுகள் வலிகள் நிறைந்தவையாகவே இருக்கின்றன. ஆக, பெண்கள் ஒவ்வொரு பருவத்திலும் படும்பாடுகளை சொல்லிமாளாது. இதில் ஒரு சிலர் விதிவிலக்கு என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்றைய சூழலில் பெரும்பாலான பெண்கள் இடுப்பு வலியில் தொடங்கி முதுகுவலி ...

வாகன ஓட்டிகள் மீது சென்னை பெருநகர காவல்துறைக்கு திடீரென பொத்துக் கொண்டு அக்கறை வந்துவிட்டது! எப்படியாவது சாலை விபத்துக்களில் இருந்து மக்களை காப்பாற்றியே தீருவது என கங்கணம் கட்டி களத்தில் இறங்கிவிட்டனர். அடடா, அவர்களின் கருணைக்கு எல்லை ஏது? சென்னையில் இன்று எங்கெங்கும் போக்குவரத்து போலீசார் இரு சக்கர வாகன ஓட்டிகளை வழிமறித்து ஓரம் கட்டி ஜரூராக பண வசூல் செய்தனர். எல்லாம் மக்கள் உயிர் மீதுள்ள அளப்பரிய அக்கறை தான் போங்கள்! நம்புவதும், நம்பாததும் உங்கள் விருப்பம்! சென்னை பெருநகர போக்குவரத்து போலீஸ் ...

இன்னும் எத்தனை காலம் தான் அரசு துறைகளில் எந்த ஒரு சேவை பெறுவதற்கும் கையூட்டையோ, கால தாமதத்தையோ எதிர்கொள்வது? இதற்கு முடிவுகட்ட சேவை பெறுவதை  உரிமையாக்கவும், குறிப்பிட்ட காலத்திற்குள் சேவை வழங்குவதை அரசின் கடமையாக்கவுமான சட்டத்தின் தேவையை பேசுகிறது இக்கட்டுரை! அறப்போர் இயக்கம்,  பொதுமக்கள் 2000 பேரிடம் ஒரு இணையவழி ஆய்வு நடத்தியது. அரசுத் துறைகளின் சேவையைப் பெறும் பொழுது லஞ்சம் கொடுத்தால்தான் வேலை நடக்கிறது என்று 93% பேரும், கசந்த அனுபவங்களைப் பெற்றதாக 82% பேரும், குறிப்பிட்டுள்ளனர். இந்தச் சூழலில்தான் சேவை பெறும் ...

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டால் பாதிக்கப்பட்டு ஆயுதப் படை காவலர் வேலுச்சாமி தன் ஆயுளையே முடிவுக்கு கொண்டு வர முயன்றது அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது! ஆன்லைன் சூதாட்டத்தால் அந்நிய நாட்டு பெருநிறுவனங்கள் ஆயிரக்கணக்கான கோடிகளை அள்ளிச் செல்வதோடு, பல குடும்பங்களையும் அழிவுக்கு தள்ளிவருகின்றனர். மக்களும், மாநில முதல்வர்களும் வலியுறுத்திய போதிலும் இதற்கு முடிவு கட்ட விரும்பாமல் மத்திய அரசு கள்ள மெளனம் சாதிப்பதின் பின்னணி என்ன..? சூதாட்டத்தின் விளைவாக ஏற்பட்ட மாபெரும் போரே மகாபாரதம் எனும் காவியம்! சூதாட்டத்தால் மானம், மரியாதை பறிபோய், ஒட்டுமொத்த குடும்பமே அழியும் ...

ஊழல் எதிர்ப்பு நோக்கு கொண்ட அறப்போர் இயக்கம்  2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டதாகும்.நேர்மையான அரசு ஊழியர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆதரவுடன் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் அம்பலத்துக்கு கொண்டு வந்துள்ளது இந்த அமைப்பு. இதன் காரணமாக ஊழல் ஆட்சியாளர்களின் பாக்கெட்டுக்குள் போக இருந்த  பல ஆயிரம் கோடி மக்கள் வரிப்பணம் அரசு கஜானாவுக்கு ஒரளவு வந்துள்ளது. கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அறப்போர் இயக்கம் வெளிச்சத்துக்கு கொண்டுவந்த பல்வேறு ஊழல் விவகாரங்களை கண்ணுற்ற மு. க. ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு ஆளான சம்பந்தப்பட்ட ...