இது 18 ம் நூற்றாண்டு நாயக்கர் கால சமூகத்தை துல்லியமாக  சித்தரிக்கும் நாவல்! சாதிகளுக்கிடையிலான நுட்பமான மோதல்களும், ஆதிக்கத்தை நிலை நாட்டிக் கொள்வதற்கான சூழ்ச்சிகளும், அதனால் ஏற்படும் பேரழிவுகளும், பாதிப்பு ஏற்படுத்துவர்களின் பதற்றமும், பாதிக்கப்படுவர்களின் சீற்றமுமான வரலாற்றில் நாம் இழந்ததையும், மீண்டதையும் பல அரிய தகவல்களுடன் படு விறு, விறுப்புடன் சுவைபடச் சொல்கிறது இரா.முத்துநாகுவின் ’சுளுந்தீ’ ஒரு சமுதாயம் எந்தக் காலத்திலும், அதனளவில் நிறைவாகவே இருந்திருக்கிறது. இப்போது ‘அரசு இரகசியம்’ என்றால், அப்போது ‘அரண்மனைக் கமுக்கம்’; இப்போது ‘காவல்துறை’ என்றால், அப்போது ‘குடிபடை’ , ...