ஜெயலலிதா இறப்பு தமிழக மக்களுக்கு இன்னும் ஒரு அவிழ்க்கப்படாத மர்மமாகவே தொடர்கிறது! ஜெயலலிதா மரணத்தில் பல ஆழமான சந்தேகங்கள் இன்னும் மக்கள் மனதை அழுத்திக் கொண்டே உள்ளன…! விசாரணை கமிஷன் அமைத்து ஒரே ஆண்டில் உண்மையை வெளிக் கொண்டு வருவோம் என்ற ஆட்சியாளர்கள், உச்ச நீதிமன்றத்தில் அப்பல்லோ ஏற்படுத்தியுள்ள தடையைக் கூட அகற்றாமல், ஒன்றரை ஆண்டுகளாக அலட்சியம் செய்கிறார்கள்.விசாரணையே நடக்காமல் பலகோடிகள் ஆணையத்திற்கும்,வழக்கிற்குமாக விரயமாகிக் கொண்டுள்ளதன் பின்னணி என்ன…? ’’அரசின் உயர்மட்டத்தில் இருப்பவர்களே ஜெயலலிதா மரணத்தில் உள்ள உண்மைகள் வெளிவருவதை விரும்பவில்லை…’’ என்ற குற்றச்சாட்டையும் ...