பல நேரங்களில் இவரது தீர்ப்பை படிக்கும் போது நீதித்துறையின் மீது மட்டுமல்லாது, இந்த சமூகத்தின் மீதே ஒரு நம்பிக்கை பிறக்கும்! ”எளிய மக்களின் ஏக்கங்களையும், நோக்கங்களையும் உள் வாங்கி அவர்களின் மனசாட்சியாக இவர் வெளிப்படுகிறாரே..!” என்று வியந்த நிகழ்வுகள் பற்பல! நீதித் துறையில் பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளை ஒரு சிறிதும் புரிந்து கொள்ளாமல் காவல்துறைக்கு ஆதரவாகவும், ஆட்சியாளர்களுக்கு ஆதரவாகவும் தீர்ப்பு சொல்லக் கூடியவர்களை பார்த்தும், கேட்டும், வெறுப்பும், விரக்தியும் அடைந்த பெருந்திரளான மக்களின் மாற்று எதிர்பார்ப்பாக நீதிபதி என்.கிருபாகரன் வெளிப்பட்டார். சில நீதிபதிகள் சமூகத்தில் இருந்து ...