சுதந்திர இந்தியாவில் எங்குமே நடந்திராத ஒரு புதிராக புதுச்சேரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சி இரண்டு மாதங்களாக இன்னும் செயல்படமுடியாமல் – அமைச்சர்களுக்கு இலாகாக்கள் வழங்கப்படாமல் – திரிசங்கு சொர்க்கத்தில் உழல்கிறது. என்.ஆர்.காங்கிரஸுக்கும், பாஜகவிற்கும் இடையே நடக்கும் மெளன யுத்ததின் விளைவே அங்கு இந்த நிலைமை தோன்ற காரணமாகியுள்ளது. புதுச்சேரியை பொறுத்த அளவில் அங்கு தங்கள் ஆட்சியை ஸ்தாபிப்பதன் மூலம் தமிழ்நாட்டு அரசியலுக்கு அடித்தளம் போடலாம் என்பது பாஜகவின் நீண்ட நாள் ஆசை! ஆனால் தனித்து நின்றால் டெபாசிட் கூட வாங்கமுடியாத அளவிலான வாக்கு வங்கி ...
”தமிழகத்தில் பாஜகவை காலூன்றவிடமாட்டோம்” என்பது தமிழகத்தில் அடிக்கடி உதிர்க்கப்படும் கமெண்ட்! ”இந்தா வந்துட்டோம்ல பாண்டிச்சேரியில!” என்பதாக – அதுவும் காங்கிரஸ் பாரம்பரியத்தில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக மூழ்கி திளைத்த மண்ணில் – தற்போது பாஜக கூட்டணி மந்திரி சபை காண்கிறது! புதுச்சேரி என்ற காங்கிரஸ் கோட்டையில் திமுக, அதிமுக கூட அவ்வளவு சுலபத்தில் அங்கீகாரம் பெற முடியாத நிலையே இத்தனை ஆண்டுகளாகத் தொடர்கிறது! தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருந்த அதிமுகவிற்கு ஓரிடம் கூட இந்த தேர்தலில் கிடைக்கவில்லை. தமிழகத்தில் தற்போது அரியணை ஏறவிருக்கும் திமுகவிற்கோ ...