மாட்டுப்பொங்கல் ஒரு  அதிர்ச்சியான செய்தியை மக்களுக்கு சொல்லிச்சென்றது. எங்க ஊர் வந்தவாசியில் அந்தக் காலத்தில் உழவு மாடுகளும், பசுக்களும் அழகழகாக ஜோடித்து,  தான் விரும்பும் கட்சிக்கொடிகலர்களை கொம்புகளில் தீட்டியும்  500 மாடுகளுக்கு குறைவில்லாமல் வரும் திடலில் இன்று 50க்கு குறைவான மாடுகள்?. அந்த மாடுகளில் நாட்டு காளைமாடுகளோ பசுக்களோ ஒன்றுகூட  இல்லை. அனைத்தும் ஜெர்ஸி இனகலப்பின பசு மாடுகளே. இன்றைய விவசாயம் 100%டிராக்டர்,டில்லர்கள் மூலம் செய்யப்படுவதால் விவசாயப் பணிகளுக்கு நாட்டு ஆண்மாடுகள் தேவையற்றதாக மாறிக் கொண்டிருக்கிறது. மாட்டுச் சாணமே இயற்கை உரமாக பயன்பட்ட நிலத்தில் ...