சமூகத்தின் அடித்தள மக்களான மக்கள் நலப் பணியாளர்கள், திமுக ஆட்சியில் வேலைக்கு அமர்த்தப்படுவதும், அதிமுக ஆட்சியில் நீக்கப்படுவதுமாக 30 ஆண்டுகள் இழுத்தடிப்பில், வேலை இழந்து பட்ட துயர் சொல்லி மாளாது! சுமார் 200 பேர் வரை மன உளைச்சலில் தற்கொலை செய்துள்ளனர்! செப்டம்பர் 1989-ல், அன்றைய திமுக ஆட்சியில் ஊரகப்பகுதிகளில் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குதல், கிராம பொதுச் சொத்துகளைப் பேணிக் காத்திடல், சிறு சேமிப்பு திட்டத்திற்கு உதவுதல் போன்ற கிராம அளவிலான பல்வேறு பணிகளுக்காக ஒரு ஊராட்சிக்கு ஒரு ஆண் மற்றும் ...