கடையெழு வள்ளல் எழுவர், கன்னிகா ஸ்திரி கடவுளர் எழுவர் என்பது போல தமிழ் சமூகத்தில் கடந்த பல ஆண்டுகளாக ராஜிவ் காந்தி கொலை சம்பந்தப்பட்ட கைதிகள் எழுவர் விவகாரம் விவாதிக்கப்பட்டுக் கொண்டே உள்ளது. திறந்த மனதுடன் – முன் கூட்டிய அனுமானங்கள் எதுவுமின்றி – இந்த விவகாரத்தை நாம் பார்ப்போம்! தமிழக வரலாற்றோடு மட்டுமல்ல, இந்திய வரலாற்றோடுப் பிண்ணிப் பிணைந்துள்ள இந்த விவகாரத்தில் என்னையுமறியாமல் நானும் சம்பந்தப்பட்டுள்ளேன்! என்னை பின் தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு இவை ஓரளவு தெரியும்! ராஜிவ்காந்தியின் ஒவ்வொரு தமிழக வருகையின் போதும் ...