ஒரு பத்திரிகையாளன் பார்வையில் சொன்னால், இது போன்ற ஒரு பிரம்மாண்ட நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சியை சென்னை கண்டதில்லை! தீவுத்திடலில் 500 நாட்டுப்புற கலைஞர்களின் அசத்தலான பல தரப்பட்ட கலை நிகழ்வுகளைக் கண்டு பரவசப்பட்டவர்கள் இதை ஆயுளுக்கும் மறக்க மாட்டார்கள்! தமிழக அரசின் கலை, பண்பாட்டுத்துறை மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து ஏற்பாடு செய்திருந்த “நம்ம ஊரு திருவிழா”,சென்னை தீவுத் திடலில் நேற்று (21.03.22) மாலை நடைபெற்றது. இந்த விழாவை பார்க்க  மனைவி மற்றும் மகளுடன் சென்றிருந்தேன். நாங்கள் சென்ற போது மணி இரவு 8.00.சின்னப் பொண்ணு, ...