பாரதியை இன்று நினைவு கூர்வதன் வாயிலாக புத்துணர்ச்சி பெறுவது மட்டும் நமது நோக்கமன்று! தற்போதைய சமூகம் பற்றிய புரிதலையும், சமூக ஞானத்தையும் வளர்த்துக் கொள்வதற்கும் தான்! சாதியை,மதத்தை, புராணங்களை,வேதங்களை பாரதியார் எவ்வாறு நமக்கு அறிமுகப்படுத்தியுள்ளார் என்பது இன்றைக்கும் நமக்கு பல குழப்பங்களை விளக்கி, தெளிவை ஏற்படுத்தும்! பாரதியாரும், காந்தியும் முன்னெப்போதையும் விட தற்போது அதிகமாக நினைவு கூறப்பட வேண்டியர்களாக உள்ளனர். பாரதியார் பெரும் புரட்சியாளர், வெடித்து நேர்பட உரைத்து,உடனே செயல்பட்டுவிடுவார்! காந்தியார் நடைமுறை செயல்திட்டத்தின் வழியே சாத்தியமான வகையிலே புரட்சியை அணுகுபவர்! பிற்போக்குவாதிகளும், மதவெறியர்களும் ...