குஜராத் படுகொலைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் பர்சானியா.சமகால மதவெறி அரசியலை மிகுந்த பொறுப்புணர்வோடு காட்சிபடுத்தியுள்ளது. காஷ்மீர் பைல்ஸ்க்கு மாற்றான மகத்தான மனித நேய கலைபடைப்பு! தொலைந்து போய் தேடப்படுவது சிறுவன் மட்டுமல்ல, மனிதமும் தான்! குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் பல்வேறு மதங்களின் மிடில்கிளாஷ் குடும்பங்கள் சேர்ந்து வாழும் அப்பார்ட்மெண்ட்ஸ்!. சைரஸின் நான்கு உறுப்பினர்களைக் கொண்ட எளிய குடும்பமும் அங்கே வசிக்கிறது. திரையரங்க ஆபரேட்டரான சைரஸ் ஒரு நல்ல மனிதாபிமானி! சைரஸ் ஷெர்னாஸ் தம்பதிக்குப் பன்னிரெண்டு வயது பர்சான் என்ற மகனும், பத்து வயது ...