‘காங்கிரஸ் இல்லாத இந்தியா’ என்பது ‘எதிர்கட்சிகள் இல்லாத இந்தியா’ என்ற இலக்கை நோக்கி நகர்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் எம்.எல்.ஏக்களை விலை பேசி, ஆட்சியை கவிழ்த்து அதிகாரத்திற்கு வருகிறது பாஜக! அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்றவை பாஜகவிற்கு அடியாள் வேலை செய்கிறதா..? ஆகஸ்ட் 17 அன்று இமாச்சல பிரதேசத்தை சார்ந்த லக்வின்தர் ரானா மற்றும் காஜல் என்ற இரண்டு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு தாவினர். மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களில் ஒருவராக சில நாட்களுக்கு முன்தான் காஜல் நியமிக்கப்பட்டார் என்பது ...
நீண்ட, நெடிய போராட்டங்களுக்கு பிறகு, 250 ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியை வீழ்த்தினோம்! அதன் பிறகு காந்திய சீடர்களால் கட்டமைக்கப்பட்ட இந்தியா, தற்போது கார்ப்பரேட் ஆதரவு அரசியல்வாதிகளால் மீண்டும் அடிமை அரசியலை நோக்கி சென்று கொண்டுள்ளது! அதற்கு தோதாக நசுக்கப்படுவதே மாநில உரிமைகள்! மாநிலங்களின் வரிவசூலிக்கும் உரிமைகளில் தலையிட்டு ஜி.எஸ்.டி எனக் கொண்டு வந்தார்கள்! மாநில வருவாயை அபகரித்துக் கொண்டு நம்மை மத்திய ஆட்சியாளர்களிடம் கையேந்த வைக்கிறார்கள்! மாநிலங்களின் வசமிருந்த கல்வி அதிகாரத்தை மத்திய அரசு கபளீகரம் செய்யும் முயற்சியே புதியகல்விக் கொள்கையும், நீட் தேர்வு ...
இந்தியா ஏறத்தாழ சுயச்சார்பை இழந்து கொண்டுள்ளது. எந்தெந்த விசயங்களில் எல்லாம் நாம் அந்நிய தேசத்தவரை அண்டிப் பிழைக்கிறோம் தெரியுமா..? காந்தி அன்று ஆடையைத் துறந்தார்! நாம் நம் சொந்த ஆன்மாவையே தொலைத்துக் கொண்டுள்ளோம். காந்தி ஆடைமாற்றம் கண்ட நூற்றாண்டு நினைவு தமிழகத்தில் பரவலாக நினைவு கூறப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது என்றாலும், காந்தியை வெறுமனே பேசுவதிலும், சிலாகிப்பதிலும் நாம் திருப்தியடைந்துவிடுகிறோம். அவர் வாழ்நாளெல்லாம் போராடி நமக்கு பெற்றுத் தந்த சுயராஜ்ஜியத்தை – சுயச் சார்பை இன்று ஏறத்தாழ நாம் இழந்து நிற்கிறோம் என்பதையே உணர முடியாதவர்களாகவுள்ளோம். இன்று ...
150 வது பிறந்த நாளிலாவது வ.உ.சி கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது. பொது வாழ்வில் நேர்மைக்கு இலக்கணமாய், தூய தொண்டுக்கு அடையாளம் திகழ்ந்தவர் வ.உ.சி! லட்சியவாதிகள் வாழ்நாள் முழுதும் வறுமையிலும், துன்பத்திலும் உழல்வதும், சந்தர்ப்பவாதிகள் பதவி, பணம், அதிகாரம் என சுகபோகம் பெறுவதும் இன்றல்ல, நேற்றல்ல..தொடர்கதை தான் என்பதற்கு வ.உ.சியே மாபெரும் உதாரணம்! செல்வ குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து நாட்டின் சுதந்திரத்திற்காகவும், தொழிலாளர்கள் உரிமைக்காகவும் பாடுபட்டதற்காக அவர் பெற்ற பரிசுகளே துன்பங்களும்,வறுமையும்! தமிழ்நாட்டின் முதல் மக்கள் தலைவர் மட்டுமல்ல, மாபெரும் தியாகி, தமிழ் ...
தேசிய பணமாக்கல் திட்டம் என்ற பெயரில் அரசின் வசமுள்ள சொத்துகள், மற்றும் பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு குத்தகைக்கு தரப் போகிறார்களாம்! இந்தியாவின் சமானிய குடிமக்களுக்கு உயர்தரத்தில் அணுகக்கூடிய வகையில் உள் கட்டமைப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக இதை செய்வதாக சொல்லப்பட்டுள்ளது. இதன்படி நாட்டின் 25 விமான நிலையங்கள், 400 ரயில் நிலையங்கள், 15 ரயில் விளையாட்டு அரங்கங்கள், 26,700 கி.மீ. தேசிய நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், மின் உற்பத்தி மற்றும் விநியோகம், ,சுரங்கம், எரிவாயுக் குழாய் உள்பட 12 அமைச்சகங்களின் 20 சொத்துக்கள் குத்தகைக்கு ...