தற்போது அரசு ஓய்வூதியம் தருவதில்லை என்பதால் சோர்வடைய வேண்டியதில்லை. நமக்கு நாமே ஓய்வு காலத்தில் பென்ஷன் கிடைக்க ஒரு வழிமுறையை உருவாக்கி கொள்ள முடியும்! அதற்கு என்ன செய்ய வேண்டும்? குறுகிய, நடுத்தர, நீண்ட கால முதலீடு வகைகளில் பெரும்பாலும் அதிகமானோர் முதலீடு செய்வார்கள். இந்த தொகையெல்லாம் நாம் சுறுசுறுப்பாக நன்றாகச் செயல்படும் போது பயன்படும் ஆனால்  இதைவிட  முக்கியமான முதலீடு  ஓய்வுக்கால முதலீடு ஆகும். இவை நாம் செயல்பட முடியாத போது தேவைப்படும். 58 வயது, 60 வயது ஓய்வு என்பதெல்லாம் முடிந்து ...

நேஷனல் ஹெரால்டு விவகாரம் தற்போது பரபரப்பாகவும், அரைகுறையாகவும் விவாதிக்கப்பட்டு வருகிறது! ராகுல் காந்தியை அமலாக்கத்துறை அதிகாரிகள் பல மணி நேரம் விசாரணை செய்து, அலைக்கழித்து வருகிறார்கள்! காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டக் களம் கண்டுள்ளனர்! உண்மையில் நடந்தது என்ன? மலையை கிள்ளி எலியை பிடித்த கதையாக விசாரணை 11 மணிகளை தாண்டியதும் , தொடர்ந்து அடுத்தடுத்த நாட்கள் விசாரணை தொடர்வதும் காங்கிரஸ் தலைவர்களை தடுப்புக் காவலில் கைது செய்வதும், போராடும் தொண்டர்களை அடித்துத்தள்ளி அநாகரீகமாக நடத்துவதையும் நாம் கண்ணுற்றோம் . அமலாக்கத்துறை காங்கிரஸ் தலைவர் சோனியா ...

குடியரசுதின சிறப்புக் கட்டுரை சங்க காலத்திலேயே வெளி நாட்டில் வணிகம் செய்ய பாய்மரக் கப்பலில் பயணித்த பாரம்பரியம் தமிழர்களுக்குண்டு. சோழர் காலத்திலேயே பிரம்மாண்ட கப்பற்படைகள் இருந்தன. இடைகாலத்தில் நாம் இழந்த பெருமைகளை மீட்டெடுக்க வ.உ.சி கொண்ட பெரு முயற்சிகளும், பெருந்துயரங்களும் காவியத் தன்மை கொண்டவை! ஆங்கிலேயருக்கு எதிராக, அழிந்து கொண்டிருந்த இந்திய கடல் போக்குவரத்து தொழிலுக்கு  புத்துயிர் அளித்தவர். இந்திய கடல்சார் வர்த்தகம் இழந்த புகழினை மீட்டெடுக்க,  வ.உ.சி. ஆற்றிய சேவை அவரது சம காலத்திலும், முன்னெப்போதும் நிகழாத மாபெரும் முன்னெடுப்பு! பிரிட்டீஷ் இந்திய ...

எளிய மக்களை நிம்மதியாக வாழவிடக் கூடாது என்பதற்காகவே ஆட்சிக்கு வந்தது போல அடுத்தடுத்து அமைதியைக் கெடுக்கும் சட்டங்களை அரங்கேற்றி வருகிறது பாஜக அரசு! இந்த மீன்வள மசோதாவோ மீனவர்களை கடலுக்கே அன்னியமாக்கி கண்ணீரில் தள்ளுகிறது! உலக மீனவர் தினம் இன்று சர்வதேச அளவில் மீனவர்களால் கொண்டாடப்பட்டது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் இன்று டெல்லியில் கூடி பாராளுமன்றம் முன்பு மீனவர் தினத்தை கேக் வெட்டி கொண்டாடினர். மீனவ மக்கள் நலன் தொடர்பாக அடுத்தடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை ...

எதற்காக மனித உரிமை ஆணையம்..? மனித உரிமையாவது..மண்ணாங்கட்டியாவது.. என்பவரா மனித உரிமை ஆணையத்தின் தலைவர்..! அருண்மிஸ்ரா நீதிபதியாக இருந்த போது வழங்கிய தீர்ப்புகள் சொல்கின்றன..அவர் எதற்கான தகுதி கொண்டவர் என….! இனி மனித உரிமை ஆணையத்தின் எதிர்காலம் என்னாகும்…? ” அதிகாரத்தை சந்தேகிக்காதவர்கள், ஆதிக்கத்தை கேள்வி கேட்க முடியாதவர்கள் உரிமைகளுக்கான இயக்கத்தில் பங்களிக்க முடியாது ” என்பார்  மனித உரிமைப் போராளி பேரா.கே.பாலகோபால். அரசாங்கத்தாலோ,அதிகாரிகளாலோ  பாதிக்கப்பட்டால்,  சாதாரண மக்களுக்கு உடனடியாக ஞாபகம் வருவது மனித உரிமை ஆணையம்தான். அதற்கு  தலைவராக ஓய்வு பெற்ற உச்ச ...

தேசியக் கல்விக் கொள்கையை ஆதரித்து ஊடகங்களும், பிரபல கல்வியாளர்களும் பொய்யான பிம்பங்களைக் கட்டமைத்து மக்களை குழப்புகிறார்கள்! அவர்கள் கட்டமைக்கும் பொய்கள் என்ன..? மறைக்கப்படும் உண்மைகள் என்ன..? ‘தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதன் மூலம் தமிழ்நாடு கல்வித் தரங்களை மேம்படுத்து வதற்கான தனது வாய்ப்பை இழந்து விடக்கூடும்’ என தி ஹிந்து ஆங்கில நாளிதழ் எச்சரிக்கிறது. பேராசிரியர் பாலகுருசாமியை மேற்கோள் காட்டி ‘தேசிய கல்விக் கொள்கை-2020 தின் ஒரு பகுதியாக தமிழ்நாடு இருக்க விரும்பவில்லை எனில், கல்வித் தரங்களையும், சாதனைகளையும் மேம்படுத்துவதற்கான வாய்ப்பை தமிழகம் இழந்து ...