புண்கள் பலவிதம்… அதிலும் ஆறாத புண்கள் வேறு ரகம். புண்… கொடியது என்றாலும், அவற்றை மிகச்சரியாக கையாண்டால் எளிதாகக் குணப்படுத்தி விடலாம். குறிப்பாக மிகச்சாதாரணமாக கிடைக்கும் கீரைகளையும் பழங்களையும் அஞ்சறைப் பெட்டி கடைச் சரக்குகளையும் கொண்டு புண்களை ஆற்றிவிடலாம். நாள்பட்ட புண்களில் சீழ் பிடித்து நாற்றத்தை ஏற்படுத்துவதுடன் உடல் உறுப்புகளை தின்று விடவும் வாய்ப்புகள் உள்ளன. புண்களால் சிலர் உறவுகளைக் கூட இழந்திருக்கின்றனர். வாய் மற்றும் வயிற்றுப் பகுதியில் ஏற்படும் புண்களால் வாய் நாற்றத்தில் தொடங்கி பிடித்த உணவை உண்ண முடியாமல் சிலர் படும் ...

மன அழுத்தம் எனப்படும் டிப்ரஷன்! சாதாரணமாக இன்று எல்லோருக்கும் ஏற்படுவதே! அது போன்ற நேரங்களில் அதிலிருந்து, சிக்காமல், சிதறிவிடாமல் வெளியேற வேண்டும்! மருந்து, மாத்திரைகளை நாடாமல், மந்திர, தந்திரவாதிகளிடம் செல்லாமல், பெரிய செலவில்லாமல் இது சாத்தியம்! பல்வேறு சூழலில் பலரையும் பாடாய்ப்படுத்திவரும் பிரச்சினைகளுள் இதுவும் ஒன்று. இதை சரிசெய்வதற்கு நம்மைச் சுற்றி மிகச் சாதாரணமாகக் கிடைக்கும் காய், கனிகள், மூலிகைகள் போதும்! ஆனாலும், பலர் நமது மண்ணின் மருத்துவத்தை நம்பாமல் வேறு பல சிகிச்சைகளை மேற்கொண்டு பலனின்றி சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். மனநலக் கோளாறு என்றதும் ...

மீண்டும் கொரோனாவா? மிரள வேண்டாம்! எல்லோரும் பயப்படுமளவு ஊரெங்கும் சளித்தொல்லை, ஜலதோஷம், காய்ச்சல் என வாட்டியெடுத்து பாடாய்ப் படுத்துகிறது. இயற்கை மருத்துவம் என்றென்றைக்கும் நம்மை காக்கும் என்ற உறுதியுடன் சில மருத்துவ ஆலோசனைகளை பகிர்கிறேன். தற்போது இந்த கட்டுரையில் நான் தரும் ஆலோசனைகளே கொரானா காலத்தில் பலரை மீட்டுக் கொண்டு வந்தது! ஆகையால், இது யாவருக்கும் பலனளிக்கும்! இயற்கைச் சூழலை நாம் ரொம்பவே கெடுத்து வைத்துள்ளோம்.தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, ஊர் உலகமெங்கும் பருவமழை அது அதற்குரிய காலங்களில் பெய்வதில்லை. ஆனபோதிலும் வரலாறு காணாத ...

அல்வாவிற்கு பேர் போனது திருநெல்வேலி! ஆனால், அந்த திருநெல்வேலியையே அல்வா துண்டுகள் போல வெட்டி விழுங்கிவருகிறார்கள் கல்குவாரி முதலாளிகள்! ஆளும் கட்சியின் எம்.பி ஒருவரே இதற்கு அனுசரணையாக இருப்பது மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது..! மேற்கு தொடர்ச்சி மலை இந்தியாவிற்கு கிடைத்த கொடை எனலாம். பசுமை மாறாக் காடுகளும்  அரிய வகை உயிரினங்களும் இங்கு ஏராளமாக உள்ளன. நர்மதை, தபதி நதிகளை தவிர மற்ற தென்னிந்திய நதிகள் அனைத்துக்கும் இதுதான் பிறப்பிடம். தமிழ்நாட்டின் ஜீவாதார நதிகளான காவிரி, வைகை ,தாமிரபரணி போன்றவற்றிற்கு தாய்மடி இம்மலைதான். தொன்மையும் ...

இந்தியாவிலேயே நகரமயமாதல் மிக அதிகமாக நடப்பது தமிழகத்தில் தான்! விவசாய நிலங்களெல்லாம் வேக,வேகமாக விழுங்கப்பட்டு புதிய மாநகராட்சிகள், நகராட்சிகள் உருவாக்கப்பட்டுக் கொண்டே உள்ளன! இதன் உள்ளார்ந்த நோக்கம் வளர்ச்சியா..? இதன் பின்னணி என்ன..? விளைவுகள் என்ன..? ”எங்க ஊரும் மாநகராட்சி ஆகிவிட்டது” என்பது மக்களில் சிலருக்கு மகிழ்வைத் தரலாம்! ஆகா, இனி பெரிய சாலை வசதிகள் செய்து தரப்படும், போக்குவரத்து வசதிகள் மேம்படும்! பெரிய,பெரிய ஷாப்பிங் மால், தியேட்டர்கள் தோன்றும், தொழிற்சாலைகள் வந்து வேலை வாய்ப்புகள் அதிகமாகும்..! என்றெல்லாம் யோசிக்க தோன்றும். இது மட்டுமல்ல, ...

இயற்கை தான் நம்மை வாழ்விக்கிறது! அந்த இயற்கைக்கு நாம் என்ன செய்யப்போகிறோம்..? சுற்றிலுமுள்ள இயற்கையை தெரிந்தும், தெரியாமலோ  அழித்து கொண்டே  இருப்பதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன..?  புதிய கிருமிகளின் தாக்கங்களுக்கும், சுற்றுச் சூழலுக்கும் தொடர்பு உண்டா..? இயற்கையை பாதுகாக்க நமக்கான பொறுப்புகளை உணரவும், உயிரினங்கள், மரங்கள்  சூழ இருப்பதால் நமக்கு ஏற்படும் நன்மைகளை அறியவும்  விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாள் தான்  ஜூன் 5.  உலக சுற்றுச்சூழல் தினம்! நம்முடைய எந்த செயலும் அடுத்தவரை பாதிக்க கூடாது என்பது போல் அந்த செயல் இயற்கையையும் பாதிக்க ...