குடியரசுதின சிறப்புக் கட்டுரை சங்க காலத்திலேயே வெளி நாட்டில் வணிகம் செய்ய பாய்மரக் கப்பலில் பயணித்த பாரம்பரியம் தமிழர்களுக்குண்டு. சோழர் காலத்திலேயே பிரம்மாண்ட கப்பற்படைகள் இருந்தன. இடைகாலத்தில் நாம் இழந்த பெருமைகளை மீட்டெடுக்க வ.உ.சி கொண்ட பெரு முயற்சிகளும், பெருந்துயரங்களும் காவியத் தன்மை கொண்டவை! ஆங்கிலேயருக்கு எதிராக, அழிந்து கொண்டிருந்த இந்திய கடல் போக்குவரத்து தொழிலுக்கு புத்துயிர் அளித்தவர். இந்திய கடல்சார் வர்த்தகம் இழந்த புகழினை மீட்டெடுக்க, வ.உ.சி. ஆற்றிய சேவை அவரது சம காலத்திலும், முன்னெப்போதும் நிகழாத மாபெரும் முன்னெடுப்பு! பிரிட்டீஷ் இந்திய ...