புதிய கவர்னர் ஆர்.என்.ரவி வந்த பிறகு திமுக அரசு சட்டம், ஒழுங்கில் தன்னை, அசகாய சூரனாக காட்டிக் கொள்ள அதிரடியாக மூவாயிரத்திற்கும் அதிகமானவர்களை கைது செய்து, ”ரவுடிகளை ஒடுக்குகிறோம்” என்றது. சமீபத்தில் தூத்துக்குடியில் இளைஞர் துரைமுருகன் என்கெளண்டரால் கொல்லப்பட்டார். அதன் பிறகு ஸ்ரீபெரும்புதூரில் வடமாநில இளைஞர்   முர்துஷா ஷேக் கொல்லப்பட்டுள்ளார். ”களத்தில் இறங்கி உண்மையைக் கண்டறிந்தால், காவல்துறையின் மீது சந்தேகம் வலுக்கிறது”  என்கிறது தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO).                    ...